யாழில் சுகாதாரத்துறை தொழிற்சங்கங்கள் பாரிய போராட்டம்!

Date:

சுகாதார தொழிற்சங்க கூட்டமைப்புடன் இணைந்து நாடு தழுவிய ரீதியில் மாகாண ரீதியாக நடத்தப்படும் தொழிற்சங்க நடவடிக்கை இன்றைய தினம் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது.

இன்று காலை 10.30 மணியளவில் வடமாகாணம் முழுவதும் உள்ள சுகாதார தொழிற்சங்க உறுப்பினர்கள் கவனயீர்ப்புப் பேரணி ஒன்றை முன்னெடுத்தனர்.

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் முன்பகுதியில் இருந்து ஆரம்பித்த பேரணி ஆஸ்பத்திரி வீதியூடாக பலாலி வீதி மற்றும் ஸ்டான்லி வீதிக்கு சென்று அங்கிருந்து மணிக்கூட்டு கோபுர வீதி ஊடாக யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையத்தை வந்தடைந்தது.

இதன்போது போராட்டத்தில் ஈடுபட்டவர்களால் சுகாதார துறையை அழிக்காதே, சுகாதார நிர்வாக சேவையை ஆரம்பி,விசேட கொடுப்பனவை உயர்த்து, பொது மக்களின் ஆரோக்கியத்தில் கவனம் எடு, பதவி உயர்வு முரண்பாட்டை தீர்த்து வை, பாடசாலை மாணவர்களுக்கு இலவசமாக முககவசங்களை வழங்கு, றணுக்கின் அறிக்கையை நடைமுறைப்படுத்து போன்ற கோஷங்கள் எழுப்பப்பட்டது.

போராட்டம் காரணமாக யாழ் நகரப் பகுதியில் பாரிய வாகன நெரிசல் ஏற்பட்டதுடன் அதனை சீர் செய்வதற்காக பொலிசார் கடமையில் ஈடுபடுத்தப்பட்டனர்.

spot_imgspot_img

More like this
Related

15 வயது சிறுமியை அடுத்த மனைவியாக்க நினைத்த 29 வயது குடும்பஸ்தர் கைது!

காதல் விவகாரம் என்ற போர்வையில் 15 வயது பாடசாலை மாணவியை தனது...

நேபாள சோகம்: உயிரிழப்பு 900-ஐ கடந்தது; 4,000+ பேரை தேடும் பணி தீவிரம்

நேபாள வெள்ளப் பெருக்கில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 900-ஐ கடந்துள்ளது. 4,000-க்கும்...

டுபாயில் சிக்கிய மற்றொரு புள்ளி

மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகம் மற்றும் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் உதவியுடன்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்