24.6 C
Jaffna
January 21, 2025
Pagetamil
உலகம்

கனடாவின் வெளியுறவு அமைச்சர் மெலனி ஜோலி கொரோனா தொற்றால் பாதிப்பு

கனடாவின் வெளியுறவுத்துறை அமைச்சர் மெலனி ஜோலி கொரோனா தொற்றிற்குள்ளாகியுள்ளார். வீரியம் மிக்க ஓமைக்ரோன் மாறுபாடு கனடா முழுவதும் அதிவேகமாக பரவுகின்ற நிலையில் covid-19 வைரஸ் தொற்றும் அதிகரித்து வருகின்றன. விரைவான ஆன்டிஜன் பரிசோதனை செய்த வெளியுறவு துறை அமைச்சர் மெலனி ஜோலி நேர்மறையான முடிவுகளை பெற்றதாக ட்விட்டரில் தெரிவித்தார்.

ஆன்டிஜன் பரிசோதனையில் covid-19 வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டதால் PCR பரிசோதனையின் முடிவுகள் வரும்வரை எப்போதும் இருந்ததைப் போலவே கிட்டத்தட்ட எனது பணியை தொடர்வேன் என்று அமைச்சர் மெலனி ஜோலி கூறினார். தற்பொழுது பொது சுகாதார நடவடிக்கைகளை பின்பற்றி தனிமைப் படுத்திக் கொண்டிருக்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.

42 வயது நிறைந்த அமைச்சர் மெலனி covid-19 வைரஸ் தொற்றுக்கு எதிரான தடுப்பூசி மருந்து பாதுகாப்பானதாக இருப்பதால் மக்கள் அனைவரும் தடுப்பு ஊசி மருந்தினை தவறாமல் போட்டுக்கொள்ள வேண்டும் என்று ஊக்கமளித்தார்.

கனடா முழுவதும் பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட covid-19 வைரஸ் தொற்று சம்பவங்கள் பதிவாகியதால் மெலனி ஜோலி இந்த அறிவிப்பை வெளியிட்டார். அச்சுறுத்திவரும் ஓமைக்காரன் மாறுபாட்டினால் பல்வேறு சுகாதார கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

ஹமாஸ்ஸினால் விடுவிக்கப்பட்ட 3 பணயக்கைதிகள் இஸ்ரேலில் இணைவு

east tamil

47வது அமெரிக்க ஜனாதிபதியாக பதியேற்கும் டொனால்ட் ட்ரம்ப்

east tamil

3 மணித்தியால இழுபறியின் பின் இஸ்ரேல்- ஹமாஸ் போர் நிறுத்தம் அமுலாகியது!

Pagetamil

2025ம் ஆண்டுக்கான ஒஸ்கர் விருது விழா ரத்தாகுமா?

east tamil

கவிழ்ந்த கொள்கலனில் பெற்றோல் எடுத்த 70 பேர் எரிந்து பலி

Pagetamil

Leave a Comment