25.9 C
Jaffna
March 29, 2024
இலங்கை

முல்லைத்தீவு சிறுமி மரணம்: வெளியான புதிய தகவல்கள்!

முல்லைத்தீவு மாவட்டத்தின், மூங்கிலாறு வடக்கில் சடலமாக மீட்கப்பட்ட சிறுமியின் கர்ப்பத்திற்கு காரணமானவரை கண்டறிய அறிவில்பூர்வமான சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதன்படி, பொலிசாரின் தடுப்புக்காவலில் உள்ள சிறுமியின் அத்தானின் டிஎன்ஏ மாதிரிகள் பெறப்பட்டு சோதனைக்காக கொழும்பிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட, உடையார்கட்டு வடக்கு மூங்கிலாறு 200 வீட்டு திட்டம் பகுதியில் கடந்த (15) புதன் கிழமை 12 வயதுடைய சிறுமி ஒருவர் காணாமல் போயுள்ளதாக புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலையத்தில் சிறுமியின் தாயாரால் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டிருந்தது.

’15ஆம் திகதி மகள் என்னுடன் வீட்டிலிருந்தார். அயல் வீட்டார் திருகோணமலை சென்றுவிட்டதால், அங்கு எரிந்து கொண்டிருந்த மின்விளக்குகளை அணைக்க காலை 6.30 மணியளவில் சென்றார். பின்னர் வீடு திரும்பவில்லை. எல்லா இடமும் தேடிவிட்டு, மதியம் 2 மணிக்கு புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்தேன்’ என தாயார் தெரிவித்திருந்தார்.

யோகராசா நிதர்சனா என்ற 12 வயது சிறுமியே காணாமல் போயிருந்தார்.

இதையடுத்து, கிராம மக்கள், பொலிசார், இராணுவத்தினர் தேடுதல் நடத்தினார்கள். பலன் கிட்டவில்லை.

இந்த நிலையில் கடந்த 18ஆம் திகதி சிறுமி சடலமாக மீட்கபட்டிருந்தார்.

ஆடைகள் கலைந்த நிலையில் சிறுமியின் வீட்டுக்கு அருகாமையில் உள்ள ஆள் நடமாட்டமில்லாத வளவு ஒன்றில் சடலம் காணப்பட்டது.

இதையும் படியுங்கள்: மீண்டும் ஒரு வித்தியாவா?; முல்லைத்தீவில் காணாமல் போன சிறுமி சடலமாக மீட்பு: பதற வைக்கும் சம்பவம்!

சடலம் மீட்க பட்டிருந்த இடத்தில் தடயவியல் பொலிஸார் மற்றும் மோப்ப நாய் கொண்டு தேடுதல்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதோடு சம்பவ இடத்துக்கு கிளிநொச்சி முல்லைத்தீவுக்கு பொறுப்பான பிரதி பொலிஸ் மா அதிபரும் வந்து விசாரணைகளை மேற்கொண்டார்.

சிறுமியின் உடல் கடந்த 19ஆம் திகதி  பிரேத பரிசோதனைக்குட்படுத்தப்பட்டதில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. சிறுமி 2 மாத கர்ப்பமாக இருக்கிறார். சிறுமியின் பிறப்புறுப்பில் காயமொன்று காணப்படுகிறது. சட்டவிரோதமான முறையில் கருக்கலைப்பு மேற்கொள்ளப்பட்டு, அதனால் காயம் ஏற்பட்டு, அதிக இரத்த பெருக்கு காரணமாக சிறுமி உயிரிழந்ததாக கருதப்படுகிறது.

உயிரிழந்த நிதர்சனா, திருகோணமலையில் தங்கியிருந்து கல்வி கற்று வந்தவர். கடந்த 7ஆம் மாதம் மூங்கிலாற்றிற்கு வந்திருந்தார். மீண்டும் ஜனவரியில் திருகோணமலைக்கு கல்வி நடவடிக்கைக்கு செல்வதாக இருந்தது.

இதையும் படியுங்கள்: 2 மாத கர்ப்பம்… கருக்கலைப்பின் போதே விபரீதம்; முல்லைத்தீவில் சடலமாக மீட்கப்பட்ட சிறுமி விவகாரத்தில் திடுக்கிடும் திருப்பம்!

சிறுமியின் கர்ப்பத்திற்கு, அவரது மூத்த சகோதரியின் கணவரான 34 வயதான அத்தானே காரணமென்ற சந்தேகத்தில் கைதாகியுள்ளார். அத்துடன், சிறுமியின் பெற்றோர், சகோதரியும் தடுத்து வைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகிறார்கள்.

சிறுமியின் மூத்த சகோதரியான 20 வயதான பெண், கடந்த மாதமளவிலேயே குழந்தை பிரசவித்திருந்தார்.

அவரது கணவனான 34 வயதானவர் ஏற்கனவே திருமணமாகி 2 பிள்ளைகள் உள்ளனர். அந்த குடும்பத்தை பிரிந்து, வேறொரு பெண்ணை திருமணம் செய்திருந்தார். அவர்களிற்கு குழந்தைகள் இல்லை. அந்த பெண்ணையும் பிரிந்து உயிரிழந்த சிறுமியின் சகோதரியை திருமணம் முடித்துள்ளார்.

அந்த கிராமத்தின் கிராம அபிவிருத்தி சங்க தலைவராகவும் அவர்தான் உள்ளார்.

கொரோனா காரணமாக பாடசாலை விடுமுறை காலத்தில் சிறுமி வீட்டில் தங்கியிருந்த காலப்பகுதியில், அத்தானினால் சிறுமி துஷ்பிரயோகம் செய்யப்பட்டு, கர்ப்பமாக்கப்பட்டிருக்கலாமென கருதப்படுகிறது.

19ஆம்திகதி பிரேத பரிசோதனையை தொடர்ந்து சடலம் உறவினர்களிடம் கையளிக்கப்பட்டது. ஆனால் பெற்றோர் பொலிசாரால் தடுத்து வைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டு வந்தனர்.

சிறுமியின் இறுதிச்சடங்கு ஊர்வலம் வீட்டிலிருந்து புறப்பட்டு, மயானத்திற்கு சென்ற போது, பெற்றோரை பொலிஸார் வாகனத்தில் அங்கு அழைத்து வந்து, இறுதி நிகழ்வில் கலந்து கொள்ள வைத்து, பின்னர் மீண்டும் அழைத்து சென்று, விசாரணை நடத்தி வருகிறார்கள். சிறுமியின் சகோதரியும் விசாரணைக்குட்படுத்தப்பட்டு வருகிறார்.

சிறுமியின் அத்தான் முல்லைத்தீவு நீதிவானின் முன் நிறுத்தப்பட்டு, பொலிசாரின் தடுப்புக்காவலில் வைத்து விசாரணை நடத்த அனுமதி பெறப்பட்டுள்ளது. நிதிவானின் அனுமதியுடன் அவருடைய டிஎன்ஏ மாதிரிகள் பெறப்பட்டுள்ளது. சிறுமியின் கருவின் டிஎன்ஏ மதிரிகளும் பெறப்பட்டு பரிசோதனைக்காக கொழும்பிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

அதன் பரிசோதனை முடிவுகள் இரண்டு வாரங்களிற்குள் தெரிய வருமென எதிர்பார்க்கப்படுகிறது.

நேற்று முன்தினம் (18) சடலமாக மீட்கப்பட்ட சிறுமி விவகாரத்தில் பொலிசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். சிறுமியின் அத்தான் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், ஏனைய குடும்ப உறுப்பினர்களிடமும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

நேற்று, சிறுமியின் உடலில் மேற்கொள்ளப்பட்ட பிரேத பரிசோதனையில் சிறுமி 2 மாத கர்ப்பமாக இருப்பது தெரிய வந்தது. சிறுமிக்கு சட்டவிரோதமாக மேற்கொள்ளப்பட்ட கருக்கலைப்பின் போதே உயிரிழந்திருக்கலாமென கருதப்படுகிறது.

சிறுமியின் பிறப்புறுப்பில் காயம் காணப்படுகிறது. இதனால் ஏற்பட்ட அதிக குருதிப் பெருக்கே மரணத்திற்கு காரணம் என தெரிய வந்தது.

What’s your Reaction?
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

பேஸ்புக்கில் இயக்கமா?: வவுனியா வாலிபருக்கு விளக்கமறியல்!

Pagetamil

இந்திய மருந்துகளால் பாதிக்கப்பட்டவர்கள் விபரத்தை ஒப்படைக்க உத்தரவு!

Pagetamil

நீதவான் திலின கமகேவிடம் வாக்குமூலம் பதிவு!

Pagetamil

மன்னிப்பு கோரிய ஞானசாரர்… ‘மதத்தலைவர் போல நடக்கவில்லை’- நீதிபதி காட்டம்: வழக்கின் பின்னணி!

Pagetamil

வெள்ளோட்டத்துக்கு முன்னர் நடந்த விபரீதம்!

Pagetamil

Leave a Comment