வவுனியாவில் பயங்கரம்: முச்சக்கர வண்டியை பந்தாடிய புகையிரதம்; பாய்ந்து தப்பித்த சாரதி!

Date:

கொழும்பில் இருந்து யாழ் நோக்கிச் சென்ற புகையிரதம் வவுனியாவில் முச்சக்கர வண்டி ஒன்றுடன் மோதி விபத்துக்குள்ளானது. இதன்போது முச்சக்கர வண்டி சாரதி முச்சக்கர வண்டியில் இருந்து பாய்ந்தமையால் மயிரிழையில் உயிர் தப்பியுள்ளார்.

இன்று (12) காலை 10.45 மணியளவில் இடம்பெற்ற இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

கொழும்பில் இருந்து யாழ் நோக்கி சென்ற கடுகதி புகையிரதமானது தாண்டிக்குளம் பகுதியில் பயணித்துக் கொண்டிருந்த போது குறித்த பகுதியில் இருந்த பாதுகாப்பற்ற புகையிரதக் கடவையை கடக்க முற்பட்ட முச்சக்கர வண்டியுடன் மோதி விபத்துக்குள்ளானது.

குறித்த விபத்தின் காரணமாக சுமார் 50 மீற்றர் தூரத்திற்கு முச்சக்கர வண்டி இழுத்துச் செல்லப்பட்டுள்ளதுடன், அது முழுமையாக சேதமடைந்துள்ளது. முச்சக்கர வண்டியின் சாரதி விபத்தின் போது பாய்ந்தமையால் மயிரிழையில் உயிர் தப்பியுள்ளார். இவ் விபத்து தொடர்பில் வவுனியா பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இதேவேளை, குறித்த பாதுகபாப்பற்ற புகையிரதக் கடவையில் பல தடவைகள் விபத்துக்கள் ஏற்பட்டிருந்தமையும், உயிரிழப்புக்கள் ஏற்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

spot_imgspot_img

More like this
Related

சிறுமியை சீரழித்த முல்லைத்தீவு ஐயருக்கு விதிக்கப்பட்ட தண்டனை!

முல்லைத்தீவில் 2011-ஆம் ஆண்டு, போரினால் இடம்பெயர்ந்த 17 வயது மாணவி ஒருவரை,...

சாக்கடையில் ஓடிய டீசல்… வாளி, கேன்களுடன் முண்டியடித்த மக்கள்! புளூமெண்டலில் பரபரப்பு!

கொழும்பு, புளூமெண்டல் பகுதியில் அமைந்துள்ள எரிபொருள் சேமிப்பு முனையத்தில் இன்று (21)...

ரூ.1,448 மில்லியனிலிருந்து ரூ.34 மில்லியனாகக் குறைந்ததா? முன்னாள் ஜனாதிபதிகளுக்கான நிதி ஒதுக்கீடு!

முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்பு மற்றும் சலுகைகளுக்காக கடந்த காலங்களில் பெருமளவு அரச...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்