வாகன இறக்குமதிக்கு அரசாங்கம் தடை விதித்துள்ள நிலையில், கடந்த வருடம் 300க்கும் அதிகமான சொகுசு வாகனங்கள் துறைமுகத்தில் இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாகவும், அந்த வாகனங்கள் தொடர்பில் இறுதித் தீர்மானம் எடுக்கப்படவில்லை எனவும் சுங்கப் பேச்சாளர், பிரதி சுங்கப் பணிப்பாளர் (சட்ட விவகாரங்கள்) சுதத்த சில்வா தெரிவித்துள்ளார்.
இந்த வாகனங்கள் தொடர்பிலான மேலதிக நடவடிக்கைகள் குறித்து நிதியமைச்சிற்கு சுங்க திணைக்களம் கடிதம் அனுப்பியும் இதுவரை நிதியமைச்சில் இருந்து பதில் வரவில்லை.
கடந்த ஆண்டு (2020) மார்ச் மாதம் கொரோனா பரவல் ஆரம்பிக்கப்பட்ட நிலையில், இறக்குமதி செய்ய தடை விதிக்கப்பட்ட பின்னர் இறக்குமதி செய்யப்பட்ட வாகனங்கள் சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்டனவா என சுங்கத்துறை விசாரித்துள்ளது.
இந்த வாகனங்களில் பெரும்பாலானவை ஜப்பான் மற்றும் பிரிட்டனில் இருந்து உரிமம் பெற்று இறக்குமதி செய்யப்பட்டவை. ஒரு வருடத்திற்கும் மேலாக துறைமுகத்தில் இருப்பதால் அழியும் அபாயத்தில் உள்ளன.
இந்த வாகனங்கள் சுமார் 1 பில்லியன் ரூபா பெறுமதியானவை.



