பிரபல பாலிவுட் நடிகர் ஷாருக்கான் நடிக்கும் லயன் திரைப்படத்தை அட்லீ இயக்கி வருகிறார் என்பதும் இந்த படத்தின் முக்கிய வேடத்தில் நயன்தாரா நடித்து வருகிறார், ஷாருக்கான், நயன்தாரா சம்பந்தப்பட்ட காட்சிகளின் படப்பிடிப்பு சமீபத்தில் நடந்தன.
இந்த நிலையில் ஷாருக்கானின் மகன் ஆர்யன்கான் தற்போது போதைப்பொருள் வழக்கில் சிக்கி இருப்பதை அடுத்து இந்த படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு எப்போது தொடங்கும் என்று தெரியாததால் நயன்தாரா கொடுத்த கால்ஷீட் வீணாகிவிட்டதாகவும் அதுமட்டுமின்றி நயன்தாராவின் கரக்டர் திடீரென முக்கியத்துவம் குறைக்கப்பட்டதாக சமூக வலைதளங்களில் குறிப்பிட்டு வருகின்றனர்.
இது குறித்து படக்குழுவினர் பதில் அளித்தபோது, நயன்தாரா இந்த படத்தில் முக்கிய கரக்டரில் நடித்து வருகிறார் என்பதில் எந்த மாற்றமும் இல்லை என்று கூறி உள்ளனர். மேலும் இந்த படத்திற்கு நயன்தாராவுக்கு பதிலாக சமந்தா நடிக்க இருப்பதாக கூறப்பட்டு வரும் தகவலையும் அவர்கள் மறுத்து உள்ளனர்
முன்னதாக இந்த படத்தில் சமந்தா தான் முதலில் தேர்வு செய்யப்பட்டதாகவும் ஆனால் அவர் குழந்தை பெற்றுக்கொள்ள திட்டமிட்டிருந்ததை அடுத்தே இந்த படத்தில் நடிக்க அவர் ஒப்புக் கொள்ளவில்லை என்றும் செய்திகள் வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது.



