மன்னாரில் கேரள கஞ்சா கடத்திய 2 பேர் சிக்கினர்!

Date:

மன்னார்-மடு பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட குஞ்சுக்குளம் பொலிஸ், இராணுவ சோதனைச் சாவடியில் பட்டா ரக லொறி ஒன்றில் கடத்தி செல்லப்பட்ட 4 கிலோ 50 கிராம் கேரள கஞ்சா பொதியினை நேற்று புதன் கிழமை (13) பொலிஸார் மீட்டுள்ளனர்.

மடு பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கு அமைவாக சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் பண்டுல வீரசிங்கவின் பணிப்பில் பொலிஸ் குழுவினர் மேற்படி கடத்தி செல்லப்பட்ட கேரள கஞ்சா மற்றும் கொண்டு சென்ற பட்டா லொறி மற்றும் சந்தேக நபர்கள் இருவர் நேற்று புதன் கிழமை (13) இரவு 9.30 மணியளவில் குஞ்சுக்குளம் பொலிஸ், இராணுவ சோதனைச் சாவடியில் கைது செய்துள்ளனர்.

மேற்படி கைது செய்யப்பட்ட இரு நபர்கள் செட்டிகுளம் பகுதியை சேர்ந்த 25 மற்றும் 27 வயதுடைய நபர்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட நபர்கள் மற்றும் கைப்பற்றப்பட்ட கஞ்சா மற்றும் பட்டா லொறி மேலதிக விசாரணையின் பின் மன்னார் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளமை குறிப்பிடத்தக்கது.

spot_imgspot_img

More like this
Related

சாக்கடையில் ஓடிய டீசல்… வாளி, கேன்களுடன் முண்டியடித்த மக்கள்! புளூமெண்டலில் பரபரப்பு!

கொழும்பு, புளூமெண்டல் பகுதியில் அமைந்துள்ள எரிபொருள் சேமிப்பு முனையத்தில் இன்று (21)...

ரூ.1,448 மில்லியனிலிருந்து ரூ.34 மில்லியனாகக் குறைந்ததா? முன்னாள் ஜனாதிபதிகளுக்கான நிதி ஒதுக்கீடு!

முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்பு மற்றும் சலுகைகளுக்காக கடந்த காலங்களில் பெருமளவு அரச...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்