கொரோனா தொற்றுடன் கல் ஏற்றிச் சென்றவர் கைது!

Date:

கோவிட் தொற்று காரணமாக தனிமைபபடுத்தப்பட்டிருந்த நபர் ஒருவர் நடமாடித் திரிவதாக வவுனியா சுகாதாரப் பிரிவினருக்கு கிடைத்த தகவலையடுத்து அவர், கைது செய்யப்பட்டு கோவிட் சிகிச்சை நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக சுகாதாரப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

வவுனியா, சிவபுரம் பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவருக்கு கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் அவர் சிகிச்சைக்காக அவரது வீட்டில் சுய தனிமைப்படுத்தப்பட்டிருந்தார்.

இந்நிலையில், குறித்த கோவிட் தொற்றாளர் தனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறி கோவிட் தொற்றுடன் வீட்டில் இருந்து வெளியேறி பல்வேறு வேலைகளில் ஈடுபடுவதாகவும், நடமாடித் திரிவதாகவும் சுகாதாரப் பிரிவினருக்கு கிடைத்த தகவலையடுத்து சுகாதாரப் பிரிவினரும், பொலிசாரும் இணைந்து குறித்த நபரை தேடி விசேட நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

இதன்போது சிறிய ரக உழவு இயந்திரத்தில் கல் ஏற்றிச் சென்ற நிலையில் குறித்த கோவிட் தொற்றாளர் சுகாதாரப் பிரிவினரால் கண்டுபிடிக்கப்பட்டு, அவர் உடனடியாகவே வவுனியா, மதவுவைத்தகுளம் பகுதியில் அமைந்துள்ள கோவிட் சிகிச்சை நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக சுகாதரப் பிரிவினர் தெரிவித்தனர்.

spot_imgspot_img

More like this
Related

சாக்கடையில் ஓடிய டீசல்… வாளி, கேன்களுடன் முண்டியடித்த மக்கள்! புளூமெண்டலில் பரபரப்பு!

கொழும்பு, புளூமெண்டல் பகுதியில் அமைந்துள்ள எரிபொருள் சேமிப்பு முனையத்தில் இன்று (21)...

ரூ.1,448 மில்லியனிலிருந்து ரூ.34 மில்லியனாகக் குறைந்ததா? முன்னாள் ஜனாதிபதிகளுக்கான நிதி ஒதுக்கீடு!

முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்பு மற்றும் சலுகைகளுக்காக கடந்த காலங்களில் பெருமளவு அரச...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்