பல்கலைக்கழகம், உயர்கல்வி நிறுவனங்களை சேர்ந்தோருக்கு 12 ஆம் திகதி தடுப்பூசி: வவுனியா பல்கலைக்கழக துணைவேந்தர்!

Date:

30 வயதிற்கு உட்பட்ட அனைத்து பல்கலைக்கழக மற்றும் உயர்கல்வி நிறுவங்களில் கல்விகற்கும் மாணவர்கள் மற்றும் உத்தியோகத்தர்களிற்கான கோவிட் தடுப்பூசி வழங்கல் செயற்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக வவுனியா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் கலாநிதி த. மங்களேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

இவ் விடயம் தொடர்பாக அவரால் மேலும்தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

பல்கலைகழக மானியங்கள் ஆணைக்குழு சுகாதார அமைச்சுடன் இணைந்து 30 வயதிற்கு உட்பட்ட அனைத்து பல்கலைக்கழக மற்றும் உயர்கல்வி நிறுவனங்களில் கல்வி கற்கும் மாணவர்கள் மற்றும் அங்கு பணிபுரியும் உத்தியோகத்தர்களிற்கான கோவிட் நோய் எதிர்ப்பு தடுப்பூசி ஏற்றுவதற்கான ஏற்பாடுகளை செய்துள்ளது.

எனவே வவுனியா மாவட்டத்தில் வாழும் அனைத்து பல்கலைக்கழக மற்றும் உயர்கல்வி நிறுவங்களில் கல்வி கற்கும் மாணவர்கள் அந்நிறுவனங்களில் பணியாற்றும் உத்தியோகத்தர்கள் எதிர்வரும் 12ம் திகதி செவ்வாய் கிழமை காலை 10 மணியிலிருந்து மாலை 3 மணிவரை பூங்கா வீதியில் அமைந்துள்ள வவுனியா பல்கலைக்கழகத்தில் தடுப்பூசியை பெற்றுக்கொள்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

மேலதிக தகவல்களை பெறுக்கொள்வதற்கும் பதிவுகளை மேற்கொள்வதற்கும் கீழ் குறிப்பிடப்பட்ட தொலைபேசி இலக்கத்துடன் அல்லது மின்னஞ்சல் ஊடாக தொடர்புகொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

தொலைபேசி-024 222 4674
மின்னஞ்சல்- umo@vau.ac.lk

spot_imgspot_img

More like this
Related

மலேசியாவில் கட்டாய தொழிலாளியாக வைக்கப்பட்டிருந்த பெண் மீட்பு: 7 இலங்கையர்கள் கைது!

சக இலங்கையர் ஒருவரைக் கட்டாயத் தொழிலாளியாகச் சுரண்டியதாகச் சந்தேகிக்கப்படும் இலங்கையர் ஒருவரை...

கபில சந்திரசேன மரண விசாரணையில் நீதிபதி அதிருப்தி

மர்மமான முறையில் மரணமடைந்தவரும், ஏர்பஸ் ஒப்பந்தத்தில் பிரதான சந்தேக நபருமான ஸ்ரீலங்கன்...

மோகினி அருவியில் முச்சக்கரவண்டி கவிழ்ந்ததில் 2 பேர் பலி

முல்கமவிலிருந்து லக்ஷபான நோக்கிச் சென்றுகொண்டிருந்த முச்சக்கர வண்டி ஒன்று, ஓட்டுநர் கட்டுப்பாட்டை...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்