கணவன் – மனைவி என்ற உறவில் இருந்து நாங்கள் பிரிந்துவிட்டோம் என்று நடிகை சமந்தா அறிவித்துள்ளார்.
தென்னிந்தியாவில் முன்னணி நடிகையாக இருக்கும் நடிகை சமந்தா, தொடர்ந்து பல வெற்றிப்படங்களில் நடித்து வருகிறார். இவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தெலுங்கு நடிகர் சைதன்யாவை திருமணம் கொண்டார். திருமணத்திற்கு பிறகும் தொடர்ந்து திரைப்படங்களில் நடித்து வருகிறார். அந்த வகையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு சமந்தாவின் நடிப்பில் வெளியான வெப் தொடர் ‘தி ஃபேமிலி மேன் 2’.
இந்த தொடரில் படுக்கையறை காட்சிகளில் நடிகை சமந்தாவின் நடிப்பு எல்லை மீறியதாக கூறப்பட்டது. இதனால் சமந்தாவின் மீது நாக சைதன்யாவும், குடும்பத்தினரும் அதிருப்தி அடைந்தனர். இதையடுத்து குடும்பத்தில் பிரச்சனை வெடித்ததால் சமந்தாவை சினிமாவுக்கு முழுப்போட வலியுறுத்தியதாக கூறப்படுகிறது. ஆனால் சமந்தா, அதற்கு மறுப்பு தெரிவித்து தொடர்ந்து திரைப்படங்களில் நடித்து வந்தார். இதனால் குடும்பத்தில் மோதல் போக்கு அதிகரிக்கவே, தனது ட்விட்டர் பக்கத்தில் குடும்ப பெயரான அக்கினேனி என்பதை நீக்கி வெறும் எஸ் மட்டும் வைத்திருந்தார்.
இதையடுத்து சமந்தாவும், நாக சைதன்யாவும், சமந்தாவும் பிரியவுள்ளதாக தொடர்ந்து சமூக வலைத்தளத்தில் செய்திகள் வெளியாகின. அதேபோன்று சமந்தாவுக்கு, நாகஜூனா குடும்பத்தினர் ரூபாய் 50 கோடி ஜீவனாம்சம் வழங்க இருப்பதாக தகவல்கள் கசிந்தது. இந்நிலையில் தனது கணவர் நாக சைதன்யாவை, பிரிந்துவிட்டதாக நடிகை சமந்தா அறிவித்துள்ளார்.
இது குறித்து வெளியாகியுள்ள பதிவில், கணவன் – மனைவி என்ற உறவில் இருந்து நாங்கள் பிரிந்துவிட்டோம். நீண்ட ஆலோசனைக்கு பிறகே இந்த முடிவை எடுத்துள்ளோம். இனி இருவேறு வழிகளில் பயணம் செய்ய உள்ளோம். இருப்பினும் எங்களின் நட்பு கண்டிப்பாக தொடரும். இந்த கடினமாக நேரத்தில் எங்களுக்கு ஆதரவளித்த நண்பர்கள், நலம் விரும்பிகள், ஊடகங்கள் என அனைவரும் நன்றி என கேட்டுக்கொண்டுள்ளார்.
மேலும் சமந்தா, தனது கணவரை பிரிந்துள்ளதால், நீதிமன்றத்திலும் விவகாரத்து கேட்டு வழக்கு தொடர்ந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.




