வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய பரிபாலனசபைக்கு இடைக்கால தடைவிதித்தது நீதிமன்றம்

Date:

வரலாற்று சிறப்புமிக்க வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயத்தின் பரிபாலன சபையின் செயற்பாடுகளுக்கு எதிராக முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றத்தினால் இடைக்கால தடைவிதிக்கப்பட்டுள்ளது.

வற்றாப்பளை கண்ணகை அம்மன் ஆலய பரிபாலன சபையின் நிரந்தர உறுப்பினராக இருந்த குலசேகரம் கிருஸ்ணபவன் என்பவரை சட்டரீதியற்ற முறையில் நீக்கியது தொடர்பிலும் சட்டரீதியற்ற முறையில் செயற்படும் ஆலய பரிபாலன சபை தொடர்பிலும் வாதங்களை முன்வைத்ததை அடுத்து முல்லைத்தீவு மாவட்ட நீதிபதியால் வற்றாப்பளை கண்ணகை அம்மன் ஆலய பரிபாலன சபையின் தலைவர் உபதலைவர் இணைச்செயளாளர்கள் பொருளாளர்களான 1ஆம் ,2ஆம் ,3ஆம்,4 ஆம் 5 எதிராளிகளான் உட்பட பரிபாலன சபை உறுப்பினர்களுக்குகெதிராக 13.07.2026 அன்று நீதிமன்றம் தடை கட்டளையைப் பிறப்பித்தது.

இவ்வழக்கின் 1 ஆம் 3ஆம் 5 ஆம் எதிராளிகள் சார்பில் ஆட்சேபணை தாக்கல் செய்யப்பட்டதை அடுத்து இன்று 27 .07. 2026 வழக்கு நீதிமன்றில் எடுத்துகொள்ள்பட்டபோது வழங்கப்பட்ட கட்டாணையை நீக்க எதிர்தரப்பு பிரபல சிரேஸ்ட சட்டத்தரணியால் வாதங்கள் முன்வைக்கப்பட்டது. இருப்பினும் வழக்காளி சார்பிலான சட்டத்தரணியின் சார்பிலான சட்டத்தரணியின் வாதத்தினை ஏற்றுக்கொண்ட மன்று எதிராளிகள் சார்பிலான ஆஜரான சட்டத்தரணியின் வாதத்தை மறுத்து வழங்கப்பட்ட தடைக் கட்டணையை 03.08.2026 வரை நீடித்தது.

இவ்வழக்கில் கௌரி சங்கரி தவராசா சட்ட நிறுவனம் சார்பில் சட்டத்தரணி தர்மராஜா தர்மஜா அணுசரனையில் சட்டத்தரணி அழகரட்ணம் ஜினோசன், சட்டத்தரணி ஜி.ஏ.அருண்ராஜ்ஆகியோருடன் சட்டத்தரணி த.சிவானந்தராஜா ஆகியோர் மன்றில் முன்னிலையாகினர்.

spot_imgspot_img

More like this
Related

மட்டு சித்தாண்டி முருகன் ஆலயத்தில் கும்பாபிஷேகம் செய்யுமாறு கோரி ஆலயத்திற்கு முன்னால் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்

சித்தாண்டி ஸ்ரீ சித்திரவேலாயுத சுவாமி ஆலயம் 14 வருடங்கள் ஆகியும் கும்பாபிஷேகம்...

கொள்ளை வழக்கில் முன்னாள் அமைச்சரின் மகனுக்கு பிணை

முன்னாள் இராஜாங்க அமைச்சர் சாந்த பண்டாரவின் மகன் அனுத பண்டார மற்றும்...

இலங்கை தமிழ் மக்களுக்கு நீதி கோரி லண்டனில் இலங்கை தூதரகத்தின் முன் கறுப்பு 83 ஜூலை போராட்டம்.

1983 ஆம் ஆண்டு ஜூலை மாதம் தமிழர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட ,இன...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்