இலங்கையில் மேலும் 121 கொரோனா வைரஸ் மரணங்கள் உறுதி செய்யப்பட்டுள்ளன. நாட்டில் இதுவரை கொரோனா தொற்றினால் மரணித்தவர்களின் எண்ணிக்கை 11,938 ஆக உயர்ந்துள்ளது.
121 மரணங்களும் நேற்று (16) நிகழ்ந்தன. 62 ஆண்களும் 59 பெண்களும் மரணித்தனர்.
45 ஆண்கள் மற்றும் 47 பெண்கள், 60 வயது அல்லது அதற்கு மேற்பட்டவர்கள்.
16 ஆண்கள் மற்றும் 12 பெண்கள், 30 முதல் 59 வயதுக்குட்பட்டவர்கள்.
30 வயதுக்குட்பட்ட ஆண் ஒருவரும் நேற்று மரணமானார்.



