நாட்டில் தற்போது நிலவிவரும் பால்மா தட்டுப்பாடு காரணமாக பாலூட்டும் தாய்மார்களிடையே தாய்பால் பற்றாக்குறையாகவுள்ள குழந்தைகளின் எதிர்காலத்தை கருத்திற்கொண்டு முதற் கட்டமாக வலிகாமம் தெற்கு பிரதேசத்தில் உள்ள ஐம்பது குழந்தைகளுக்கு காலை நேர பசும்பாலை கோசாலா பசுக்கள் காப்பகத்தின் மூலமாக ஒரு பசுவின் தூய தனிபாலினை இலவசமாக வழங்குவதற்கு தீர்மானித்துள்ளதாக பணிப்பாளர் தவராஜா துவாரகன் தெரிவித்துள்ளார்.
இவ் திட்டத்திற்கு தகுதியான குழந்தைகளின் தாய்மார் குடும்ப நல உத்தியோகத்தரின் உறுதிப்படுத்தலுடன் வழங்குவதன் மூலம் மூன்று மாத காலப்பகுதிக்கான இலவச பசும்பாலை வழங்குவதற்கு எதிர்வரும் முதலாம் திகதி முதல் தயாராகவுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.




