திட்டமிட்டதைவிட முன்பாக பதவி விலகுகிறேன்: மத்திய வங்கியின் ஆளுனர்!

Date:

மத்திய வங்கியின் ஆளுநர் டபிள்யூ டி.லக்ஷ்மன், செப்டெம்பர் 14ஆம் திகதியன்று தனது இராஜினாமா கடிதத்தை கையளிக்கவுள்ளார்.

இன்று வீடியோ தொழில்நுட்பத்தின் ஊடாக செய்தியாளர்களிடம் இதனை தெரிவித்தார்.

அவர் அடுத்த மாதம் தனது 80 வது பிறந்தநாளில் ஓய்வு பெற திட்டமிட்டிருந்தாலும், கடந்த வாரம் மற்றும் பத்து நாட்களில் நடந்த சோகமான நிகழ்வுகள் அவரது ஓய்வை சுமார் ஆறு வாரங்கள் விரைவுபடுத்தியதாக கூறினார்.

பதவிக்காலத்தில் மனச்சாட்சிக்கு விரோதமான எந்த முடிவையும் எடுக்கவில்லையென கூறினார்.

பேராசிரியர் டபிள்யு. டி.லக்ஷ்மன் 2019 டிசெம்பர் 24ஆம் திகதி மத்திய வங்கி ஆளுனராக பொறுப்பேற்றுக் கொண்டார்.

பேராசிரியர் லக்ஷ்மன் நன்கறியப்பட்ட பொருளியலாளர் ஆவார். இவர் 1994 இலிருந்து 1999 வரையான காலப்பகுதியில் கொழும்பு பல்கலைக்கழகத்தின் துணை வேந்தராகப் பணியாற்றினார். 2005இல் கல்வியல் துறையில் அவர் ஆற்றிய பணிக்காக தேசமான்ய விருது அவருக்கு வழங்கப்பட்டது.

பேராசிரியர் லக்ஷ்மன் இலங்கை மத்திய வங்கியின் 15 ஆவது ஆளுநராவார். புதிய ஆளுனராக அஜித் நிவார்ட் கப்ரால் பதவியேற்பார்.

spot_imgspot_img

More like this
Related

யாழ். விமான நிலைய ஓடுபாதையில் மின்விளக்குகள் கூட இல்லாதது அதிர்ச்சியளிக்கிறது

காங்கேசன்துறை துறைமுகம் மற்றும் யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலைய அபிவிருத்திக்கு இந்திய...

6 பிரதிப்பொலிஸ்மா அதிபர்களுக்கு இடமாற்றம்

தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் அங்கீகாரத்திற்கு உட்பட்டு, ஆறு பிரதி பொலிஸ் மா...

கொள்ளுப்பிட்டியில் சடலம் மீட்பு

கொள்ளுப்பிட்டி, அல்பிரட் ஹவுஸ் அவென்யூ பகுதியில் சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்த நிலையில்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்