அமைச்சர் சமல் ராஜபக்சவும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
அவர் கொழும்பில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சமல் ராஜபக்சவுடன் தொடர்பிலிருந்தவர் கொரோனா தொற்றிற்குள்ளானதையடுத்து, அவர் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டார்.
தனிமைப்படுத்தலின் போது, கோவிட் பிசிஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டபோது அவருக்கு நோய் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.




