அக்குள் வியர்வையின் மூலம் கொரோனா வைரஸை அடையாளம் காணும் புதிய கருவி ஒன்றைத் தாய்லந்தின் ஆய்வாளர்கள் உருவாக்குகின்றனர்.
அதை பேங்காக் உணவுச்சந்தையில் சோதித்தும் பார்த்துள்ளனர்.
COVID-19 வைரஸால் பாதிக்கப்பட்டவர்களிடம் மாறுபட்ட இரசாயனங்கள் சுரப்பதாக பாங்கொக்கின் சுலாலொங்கொர்ன் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் சாடின் குல்சிங் தெரிவித்துள்ளார்.
அவர்களின் வியர்வையில் உள்ள ஒரு குறிப்பிட்ட பக்டீரியாவின் வாடையை அடையாளம் காணும் கருவியை உருவாக்கியுள்ளதாக அவர் தெரிவித்தார்.
அந்தப் பரிசோதனை முறை 95 வீதம்துல்லியமானது என்று அவர் குறிப்பிட்டார்.
மாதிரிகளைப் பெற 15 நிமிடங்களாகும். பரிசோதனை முடிவுகள் 30 வினாடிகளில் தயாராகிவிடும்.
ஆய்வகச் சோதனைகள் தேவைப்படும் Swab பரிசோதனைகளைக் காட்டிலும் அது செலவு குறைந்ததாக இருக்கும் என நம்புவதாக குறிப்பிட்டார்.
ஆனால், அந்தக் கருவி தற்போது உருவாக்கப்படும் நிலையில்தான் உள்ளது.
அதன் ஆராய்ச்சியின் முழு விவரங்கள் இன்னும் வெளியிடப்படவில்லை.




