அமெரிக்காவின் மிச்சிகன் மாகாணத்தை சேர்ந்த 30 வயதான இளைஞர் ஒருவர், சுய இன்பத்திற்காக தனது ஆண்குறியில் 6 அவரை விதைகளை செருகியிருக்கிறார். அது, விந்து வெளியேறும்போதோ அல்லது சிறுநீர் கழிக்கும்போதோ வெளியே வந்துவிடும் என நினைத்துள்ளார். ஆனால் அவை வராததால் விபரீதமானது.
அவரை விதைகள் சிக்கியதால் திணறிப்போன அந்த இளைஞர் மிச்சிகனில் உள்ள ஸ்பாரோ மருத்துவமனைக்கு சென்றுள்ளார்.
தன்னால் சிறுநீர் கழிக்க இயலவில்லை என்றும் அந்த இளைஞர் மருத்துவர்களிடம் கூறியுள்ளார். மருத்துவர்கள் விசாரித்ததில், வெட்கத்தை விட்டு, நடந்ததை கூறியுள்ளார் அந்த இளைஞன்.
இளைஞருக்கு சிஸ்டோஸ்கோபி மற்றும் சிறுநீர்க்குழாயில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டு அவரை விதைகள் வெளியே எடுக்கப்பட்டன. இதுபோன்று அந்த இளைஞர் பல முறை சுய இன்பத்தை அனுபவிக்க அவரை விதைகளை தனது இனப்பெருக்க உறுப்பில் செலுத்தியுள்ளதாக தெரிகிறது. அதிர்ஷ்டவசமாக இளைஞருக்கு பெரிய ஆபத்து ஏதும் ஏற்படவில்லை என தெரிவித்த மருத்துவர்கள், இதுபோன்ற விபரீதங்களில் ஈடுபட்டால், பின்னர் வேறெதிலுமே ஈடுபட முடியாமல் போய்விடும் என எச்சரித்துள்ளனர்.



