மனைவியை பிரிந்து வாழ முடியாதாம்; வைத்தியசாலையிலிருந்து தப்பியோடிய கொரோனா நோயாளி: மீண்டும் அழைத்து வந்து ஒப்படைத்த மனைவி!

Date:

வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த 33 வயதுடைய கோவிட் தொற்றாளர் இன்று (11) மதியம் வைத்தியசாலையிலிருந்து தப்பியோடியுள்ளார்.

நெளுக்குளம் சாம்பல்தோட்டம் பகுதியில் வசித்து வசித்து வந்த நிலையில் குறித்த நபர் கோவிட் தொற்றாளராக இனங்காணப்பட்டதையடுத்து, வவுனியா வைத்தியசாலையின் கோவிட் சிகிச்சை விடுதியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

அவரது மனைவி தற்போது நிறைமாத கர்ப்பிணியாக காணப்படுகின்றார்.

இந்நிலையிலேயே குறித்த கோவிட் தொற்றாளர் மதியம் மனைவியைப் பார்ப்பதற்காக அவரது வீட்டிற்கு தப்பியோடியுள்ளார். அதன் பின்னர் மனைவி அவரை மீண்டும் வைத்தியசாலைக்கு அழைத்து வந்து ஒப்படைத்துள்ளார்.

மனைவியை விட்டு பிரிந்து வாழ முடியாத நிலையில் அவர் வைத்தியசாலையிலிருந்து தப்பியோடியுள்ளதாக ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரியவருகின்றது.

Share post:

spot_imgspot_img

More like this
Related

மட்டு சிறையிலிருந்து கைதி தப்பியோட்டம்

மட்டக்களப்பு சிறைச்சாலையில் தண்டனை பெற்ற சிறைக்கைதி ஒருவர் இன்று வியாழக்கிழமை (14)...

விஜய்யை வாழ்த்தியதால் அநுரவுக்கு வந்த சிக்கல்!

சமீபத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய்க்கு ஜனாதிபதி அனுர...

கோட்டாவின் கொடூர பழிவாங்கலுக்கு பரிகாரம்: ஷானி அபேசேகரவிற்கு பதவி உயர்வு!

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் இயக்குநரான ஷானி அபேசேகரவை, காவல்துறை பிரதிப் பொலிஸ்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்