அடுத்த வாரம் அமைச்சரவை மாற்றம் நடக்க வாய்ப்புள்ளது என தகவல் வெளியாகிள்ளது. இதில் முக்கிய சில தலைகள் உருளும் என தகவல் வெளியாகியுள்ளது.
முக்கியமாக சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சியின் தலை உருளும் என தெரிகிறது.
அவருக்கு பதிலாக ரமேஷ் பத்திரண புதிய சுகாதார அமைச்சராக நியமிக்கப்படும் வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. எனினும் இது இன்னும் இறுதி செய்யப்படவில்லை.
மற்ற இலாகாக்கள் கல்வி, வலுசக்தி, ஊடகம் மற்றும் வெளிவிவகார அமைச்சுக்களில் மாற்றம் இருக்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தற்போது கல்வி அமைச்சராக இருக்கும் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் புதிய வெளிவிவகார அமைச்சராக பதவியேற்பார் என தகவல் வெளியாகியுள்ளது.




