விஷ்ணு மகாவிஷ்ணுவின் இந்த மந்திரத்தை துதிப்பவர்களுக்கு இல்வாழ்க்கை சிறந்து வாழ்வில் எல்லா நலன்களும் பெற்று இன்புறுவார்கள் என்பது ஆன்மீக சான்றோர்களின் வாக்காகும்.
ஓம் க்லீம் ஹரயே நமஹ
காக்கும் கடவுளான ஸ்ரீ மகாவிஷ்ணுவுக்குரிய மந்திரம் இது. இந்த மந்திரத்தை இல்வாழ்க்கையில் இருக்கும் ஆண்களும், பெண்களும் தினமும் காலையில் விஷ்ணு படத்திற்கு முன்பாக நின்று 27 முறை அல்லது 108 முறை உரு ஜெபிப்பது நல்லது. புதன் மற்றும் சனிக்கிழமைகளில் பெருமாள் கோவிலுக்கு தம்பதிகள் சென்று பெருமாளுக்கு பூக்கள் சமர்ப்பித்து, நல்லெண்ணெய் தீபம் ஏற்றி இந்த மந்திரத்தை 108 முறை தம்பதிகள் இருவரும் சேர்ந்து துதிப்பதால் கணவன் மனைவிக்குள் இருக்கும் பிரச்சனைகள் அனைத்தும் தீர்ந்து, என்றும் இணைந்திருக்காமல் வாழும் அமைப்பு உண்டாகும். குடும்பத்தின் பொருளாதார நிலை உயரும்.
ஆதிசேஷன் மீது வீற்றிருந்து யோகநித்திரையிலிருந்த படியே உலகை காத்துக்கொண்டிருப்பவர் நாராயணன் எனப்படும் மகாவிஷ்ணு. செல்வ மகளான லட்சுமியை பத்தினியாக கொண்டவரும், அந்த லட்சுமியை அவரது இதயத்தில் கொண்டிருப்பவர் நாராயணனாகிய திருமால். அந்த மகாவிஷ்ணுவின் இந்த மந்திரத்தை துதிப்பவர்களுக்கு இல்வாழ்க்கை சிறந்து வாழ்வில் எல்லா நலன்களும் பெற்று இன்புறுவார்கள் என்பது ஆன்மீக சான்றோர்களின் வாக்காகும்.