18L எரிவாயு சிலிண்டரை 1,150 ரூபாவிற்கு விற்க அனுமதி!

Date:

புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட 18 லீற்றர் கொண்ட சமையல் எரிவாயு கொள்கலனைச் சந்தையில் விற்பனை செய்வதற்கு அமைச்சரவை அனுமதியளித்துள்ளது.

நேற்று (19) இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் இந்த தீர்மானம் எட்டப்பட்டது.

இந்த கொள்கலனின் விலை 1,150 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக வர்த்தகத்துறை அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

12.5 கிலோ கிராம் எடைகொண்ட சமையல் எரிவாயு அடங்கிய கொள்கலனின் தற்போதைய உயர்ந்த பட்ச விலை 1,493 ரூபாவாகும்.

18 லீற்றர் அளவில் சந்தையில் அறிமுகப்படுத்தப்பட்ட எரிவாயு கொள்கலன் தொடர்பாகக் கடந்த காலங்களில் பெரும் எதிர்ப்புகள் தெரிவிக்கப்பட்டு வந்தன.  இந்த கொள்கலன் ஊடாக நுகர்வோர் ஏமாற்றப்படுவதாக விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன. நாடாளுமன்றத்திலும் எதிர்க்கட்சிகள் இதனை ஆதாரபூர்வமாக வெளிப்படுத்தியிருந்தன.

இந்த விடயங்களைக் கருத்திற்கொண்டு, வர்த்தக அமைச்சரினால் நேற்று அமைச்சரவையில் யோசனை ஒன்று முன்வைக்கப்பட்டது.

இதன்படி இதற்கு முன்னர் 1,395 ரூபாவிற்கு விற்பனை செய்யப்பட்டு வந்த 18 லீற்றர் சமையல் எரிவாயு கொள்கலனை, 1,150 ரூபாவிற்கு விற்பனை செய்வதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது

spot_imgspot_img

More like this
Related

பாம்பு கடித்த நாவல்பழத்தை சாப்பிட்ட சிறுவன் பலி

நிலத்தில் வீழ்ந்து கிடந்த பாம்பின் விஷம் பட்டதாக சந்தேகிக்கப்படும் நாவல் பழத்தை...

பாடசாலைகளிலும் போதைப்பொருள் சோதனை!

நாடு முழுவதும் உள்ள பாடசாலைகளில் போதைப்பொருட்களைக் கண்டறியும் சோதனைகள் நடத்துவதற்கான நடவடிக்கைகள்...

சமூக ஊடகங்களில் பெண்ணின் அந்தரங்க படங்களை பரப்பியவர் கைது!

சமூக ஊடகங்களில் ஒரு பெண்ணின் நிர்வாணப் புகைப்படங்களைப் பரப்பியதற்காக, கினிகத்ஹேன பகுதியில்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்