நாட்டில் நேற்று 1,487 நபர்கள் கொரோனா தொற்றுடன் அடையாளம் காணப்பட்டனர். இதுவரை அடையாளம் காணப்பட்ட தொற்றாளர்களின் எண்ணிக்கை 286,419 ஆக உயர்ந்தது.
நேற்று அடையாளம் காணப்பட்டவர்களில் 1,464 பேர் புத்தாண்டு கொத்தணியுடன் இணைக்கப்பட்டுள்ளனர், வெளிநாட்டிலிருந்து நாட்டுக்கு வந்த 23 நபர்களும் வைரஸால் பாதிக்கப்பட்டனர்.
கடந்த 24 மணி நேரத்தில் 5,172 நபர்கள் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பினர். குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 261,848 ஆக உயர்ந்தது.
கொரோனா வைரஸுக்கு சிகிச்சை பெறும் நபர்களின் எண்ணிக்கை தற்போது 20,792 ஆக உள்ளது.
நேற்று 48 கொரோனா மரணங்களும் பதிவாகியது. மரணங்களின் எண்ணிக்கை 3,827 ஆக உயர்ந்தது.




