உலகின் முதல் சூழல் நட்புறவு ஸ்மார்ட் ஃபேஸ் மாஸ்கை ‘ப்ரீத்டெக்-எஸ் 3’ வர்த்தக நாமத்தின் கீழ் விளையாட்டு அமைச்சர் நாமல் ராஜபக்ச நேற்று (10) அறிமுகப்படுத்தினார்.
இந்த சூழல் நட்புறவு ஸ்மார்ட் ஃபேஸ் முகக்கவசத்தின் உற்பத்தி செயல்முறைக்கு ஹிர்தராமணி குழுமம், இலங்கை நானோ தொழில்நுட்ப நிறுவனம் (SLINTEC) மற்றும் சர்க்யூ டெக்னோலஜிஸ் ஆகிய மூன்று நிறுவனங்களும் கூட்டாக பங்களிப்பு செய்துள்ளன.
ப்ரீத்டெக்-எஸ் 3 முகக்கவசங்கள், உள்ளூரில் கிடைக்கும் நீடித்த மூல, இயற்கை மற்றும் மக்கும் பொருட்களின் கலவையைப் பயன்படுத்தி தயாரிக்கப்படுகிறது.
சுவாச வீதத்தை அளவிடும் மேம்பட்ட கிராபெனின் அடிப்படையிலான சென்சார் (காப்புரிமை நிலுவையில் உள்ளது) அமைப்பு, முகக்கவச பொருத்தம், CO2 அளவு மற்றும் முகக்கவச பயன்பாடு ஆகியவற்றை மொபைல் பயன்பாடு வழியாக அணுகக்கூடியவை.
2021 டோக்கியோ ஒலிம்பிக்கிற்கு செல்லும் இலங்கை அணிக்கு இந்த ஸ்மார்ட் முகக்கவசங்கள் வழங்கப்படுகின்றன.



