வேலைவாய்ப்பு போர்வையில் வெளிநாட்டு அழகியை அழைத்து பாலியல் வலையமைப்பு: வெள்ளவத்தைவாசி சிக்கினார்!

Date:

உஸ்பெகிஸ்தான் பெண்ணை பயன்படுத்தி பாலியல் கடத்தல் வலையமைப்பை நடத்திய குற்றச்சாட்டில் வெலள்ளவத்தையை சேர்ந்த 31 வயது நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபரை குற்றவியல் புலனாய்வுத் துறை (சிஐடி) நேற்று கைது செய்ததாக போலீசார் தெரிவித்தனர்.

இந்த நபர் வேலைவாய்ப்பு வழங்கும் போர்வையில் 36 வயதான உஸ்பெகிஸ்தான் பெண்ணை அழைத்து, அவரை பயன்படுத்தி பாலியல் வலையமைப்பை இயக்கியுள்ளார்.

இது தொடர்பாக IOM அமைப்பு சிஐடியிடம் புகார் அளித்திருந்தது.அதைத் தொடர்ந்து விசாரணைகள் தொடங்கப்பட்டு சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மேலதிக விசாரணையில், சந்தேக நபரின் உஸ்பெகிஸ்தான் நாட்டவரான மனைவி, இதேபோன்ற குற்றத்தைச் செய்த குற்றச்சாட்டில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது.

சந்தேகநபர் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார் என்று போலீசார் தெரிவித்தனர்.

spot_imgspot_img

More like this
Related

பாடசாலைகளிலும் போதைப்பொருள் சோதனை!

நாடு முழுவதும் உள்ள பாடசாலைகளில் போதைப்பொருட்களைக் கண்டறியும் சோதனைகள் நடத்துவதற்கான நடவடிக்கைகள்...

சமூக ஊடகங்களில் பெண்ணின் அந்தரங்க படங்களை பரப்பியவர் கைது!

சமூக ஊடகங்களில் ஒரு பெண்ணின் நிர்வாணப் புகைப்படங்களைப் பரப்பியதற்காக, கினிகத்ஹேன பகுதியில்...

முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ கைது!

முன்னாள் அமைச்சரான ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ சற்றுமுன்னர் இலஞ்சம் மற்றும் ஊழல் தடுப்பு...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்