தனிமைப்படுத்தல் மையத்தில் முல்லைத்தீவுப் பெண் கைது!

Date:

வெயாங்கொடவில் வெளிநாட்டிலிருந்து திரும்பும் பெண்களுக்காக இயக்கப்படும் தனிமைப்படுத்தல் மையத்தில் சந்தேகத்திற்கிடமான முறையில் நடந்து கொண்ட ஒரு பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.

அந்த மையத்தில் இருந்த ஏனைய பெண்கள் பற்றிய தகவல்களை சேகரிப்பதைக் கண்ட அந்த பெண்ணின் சந்தேகத்திற்கிடமான நடத்தை குறித்து மையத்தின் அதிகாரிகள் வெயாங்கொட போலீசாருக்கு தகவல் அளித்துள்ளனர்.

அவரது கட்டாய தனிமைப்படுத்தல் காலம் முடித்த பின்னர் நேற்று அவர் கைது செய்யப்பட்டார்.

அந்தப் பெண் பொலிசாரால் கைது செய்யப்பட்டு நடத்தப்பட்ட விசாரணையில், அவர் முல்லைத்தீவை சேர்ந்தவர் என்பது தெரிய வந்தது. 2019 பெப்ரவரி மாதம் போலி பெயர் மற்றும் போலி ஆவணங்களை தயாரித்து சவுதி அரேபியாவுக்கு புறப்பட்டதாக தெரியவந்துள்ளது.

அந்தப் பெண் இன்று அத்தனகல்ல நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார்.

அரசாங்க தனிமைப்படுத்தல் மையத்தில் தனிமைப்படுத்தலுக்கு உட்பட்ட மற்ற பெண்கள் குறித்த தகவல்களை சந்தேக நபர் ஏன் சேகரித்தார் என்பதை அறிய வெயாங்கொட போலீசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

spot_imgspot_img

More like this
Related

பாம்பு கடித்த நாவல்பழத்தை சாப்பிட்ட சிறுவன் பலி

நிலத்தில் வீழ்ந்து கிடந்த பாம்பின் விஷம் பட்டதாக சந்தேகிக்கப்படும் நாவல் பழத்தை...

பாடசாலைகளிலும் போதைப்பொருள் சோதனை!

நாடு முழுவதும் உள்ள பாடசாலைகளில் போதைப்பொருட்களைக் கண்டறியும் சோதனைகள் நடத்துவதற்கான நடவடிக்கைகள்...

சமூக ஊடகங்களில் பெண்ணின் அந்தரங்க படங்களை பரப்பியவர் கைது!

சமூக ஊடகங்களில் ஒரு பெண்ணின் நிர்வாணப் புகைப்படங்களைப் பரப்பியதற்காக, கினிகத்ஹேன பகுதியில்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்