15 வயதான சிறுமியை இணையத் தளம் ஊடாக விளம்பரப்படுத்தப்பட்டு பாலியல் தேவைகளிற்காக விற்பனை செய்த விவகாரத்தில் பாடகர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
பொலிஸ் சிறுவர் மற்றும் மகளிர் துஷ்பிரயோக தடுப்பு பொலிஸ் பிரிவின் சிறப்புக் குழு கண்டி பகுதியில் வைத்து அவரைக் கைது செய்துள்ளது.
கைது செய்யப்பட்ட பாடகர் இன்று கொழும்பு நீதிவான் நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்டு 17ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
இணையத்தளத்தில் விளம்பரத்தை பார்த்து விட்டு தொடர்பு கொண்ட பாடகரை, தற்போது விளக்கமறியலில் உள்ள ஹொட்டல் மேலாளர், பம்பலப்பிட்டியிருள்ள ஹொட்டல் ஒன்றில் ஏற்பாடு செய்து கொடுத்துள்ளார்.
சிறுமியை பணம் கொடுத்து வாங்கிய குற்றச்சாட்டில் பாடகர் கைதாகியுள்ளார்.



