அழகியிடம் சிஐடி விசாரணை!

Date:

தொலைக்காட்சி தொகுப்பாளர் சமுதித சமரவிக்ரமாவின் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக செய்யப்பட்ட முறைப்பாட்டை தொடர்ந்து, மொடல் பியுமி ஹன்சமலியை குற்றவியல் புலனாய்வுத் துறை (சிஐடி) விசாரித்துள்ளது.

கடந்த வாரம் சிஐடி முன் ஆஜரானதாக ஹன்சமலி கூறினார்.

நேற்று பேஸ்புக்கில் நேரடி ஒளிபரப்பில் பியுமி இதனை தெரிவித்தார்.

சமுதித சமரவிக்ரமவால் புகார் அளிக்கப்பட்டதாக பின்னர் பொலிசார் தனக்கு அழைப்பு அனுப்பியதாகவும், தான் யாருக்கும் தீங்கு செய்ய மாட்டேன் என்று கூறி   குற்றச்சாட்டுகளை நிராகரித்ததாக ஹன்சமலி கூறினார்.

கொழும்பு ஷாங்க்ரி-லா ஹோட்டலில் நிகழ்வு அமைப்பாளர் சந்திமல் ஜெயசிங்கவின் பிறந்தநாள் விழாவில் கலந்து கொண்ட பலருடன் பியுமி ஹன்சமலி சமீபத்தில் தனிமைப்படுத்தப்பட்டார்.

அவர்களிற்கு நீதிமன்றத்தால் பிணை வழங்கப்பட்ட போதிலும், தன்னையும் மற்றவர்களையும் தனிமைப்படுத்துமாறு ஒரு தனியார் தொலைக்காட்சி சனல் மற்றும் சமரவிக்ரம ஆகியோர் காவல்துறையைத் தூண்டியதாக அவர் குற்றம் சாட்டியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

spot_imgspot_img

More like this
Related

ஹோர்முஸ் நீரிணையில் 3 எண்ணெய் கப்பல்கள் எரிகின்றன: ஈரான் புரட்சிகர காவல்படை

ஹோர்முஸ் நீரிணையில் (Strait of Hormuz) கப்பல்கள் செல்லும்போது கண்ணிவெடிகளில் மோதியதில்...

கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைதான யாழ் வாசி பிணையில் விடுதலை!

தமிழகத்திலிருந்து நாடு திரும்பிய நிலையில், கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து...

ரகித ராஜபக்ஷவின் வங்கிக் கணக்குகள் முடக்கம்

முன்னாள் நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷவின் மகனான ரகித ராஜபக்ஷவுக்குச் சொந்தமான...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்