கடந்த 24 மணி நேரத்தில் 37 பேர் கொரோனா தொற்றினால் உயிரிழந்துள்ளனர்.
இலங்கையில் இதுவரை பதிவான COVID-19 தொடர்பான இறப்பு எண்ணிக்கை 3,157 ஆக அதிகரித்துள்ளது.
25 ஆண்களும் 12 பெண்களும் நேற்று உயிரிழந்தனர்.
இறந்தவர்களில் 28 நபர்கள் 60 வயது அல்லது அதற்கு மேற்பட்டவர்கள் என அடையாளம் காணப்பட்டனர், 8 பேர் 30 முதல் 59 வயதுக்கு உட்பட்டவர்கள் மற்றும் ஒரு நபர் 30 வயதுக்கு குறைவானவர்.




