அரசியலை விட்டு விலகினார் ராமதாஸ்: பாமகவை அன்புமணியே பார்த்துக் கொள்வார் என விளக்கம்

Date:

அரசி​யல் துறவறம் மேற்​கொண்​டிருப்​ப​தாக​ பாமக நிறு​வனர் ராம​தாஸ் அறி​வித்தார்.

பாமக​வில் தந்​தைக்​கும் மகனுக்​கும் அதி​காரப்​போட்டி நடந்​து​வந்த நிலை​யில் கட்​சியே இரு அணி​களாக பிரிந்​திருந்​தன. இந்​நிலை​யில் கடந்த சில நாட்​களுக்கு முன்பு தைலாபுரத்​தில் ராம​தாஸ் – சரஸ்​வ​தி​யின் 61-வது திருமண நாளில் குடும்​பத்​துடன் வந்து பெற்​றோரிடம் ஆசி பெற்​றார். இதன்​மூலம் கோஷ்டி அரசி​யல் முடிவுக்கு வந்​தது.

இந்​நிலை​யில் திண்​டிவனம் அடுத்த கோனேரிக்​குப்​பத்​தில் உள்ள கல்வி நிலை​யத்​தில் தனது 88-வது பிறந்த நாளை ராம​தாஸ் நேற்று கொண்​டாடி​னார். ராம​தாஸும், அன்​புமணி​யும் ஓராண்​டுக்கு பிறகு ஓரே மேடை​யில் அமர்ந்​திருந்​தனர். மரக்​கன்​றுகளை நட்டு வைத்து ராம​தாஸ் பேசி​ய​தாவது: உங்​களுக்கு நல்ல செய்​தியை சொல்​கிறேன். நான் அரசி​யல் பேச மாட்​டேன்.

அரசி​யலுக்கு வழி​காட்ட மாட்​டேன். என்னை சந்​திக்க வருபவர்​களை பார்ப்​பேன், நலம் விசா​ரிப்​பேன், அவ்​வளவு​தான். அரசி​யலில் தலை​யிட​மாட்​டேன். அரசி​யலை அன்​புமணி பார்த்​துக்​கொள்​வார். அவரது மனை​வி​யும், நாங்​களும் துணை​யாக இருப்​போம். என்னை பார்க்க வருபவர்​கள் என்னை பார்த்​து​விட்​டு, அய்யா நலமா என விசாரித்துச் செல்​லலாம்.

அரசி​யல் பேசுவதற்கு ஏது​மில்​லை. இன்று (நேற்​று) முதல் அரசி​யல் துறவறம் மேற்​கொண்​டிருக்​கிறேன். இந்த கல்விக் கோயில் மேலும் சிறப்​பாக செயல்பட பாடுபட வேண்​டும். இதுவே எனக்கு நீங்​கள் செய்​கின்ற காணிக்​கை​யாக கருதுகிறேன். உங்​களு​டன் நீண்ட நேரம் பேச ஆசை இருந்​தா​லும், தலை சுற்​றல் வியா​தி, இப்​போதும் எட்டிபார்க்​கிறது. ஆனாலும் உங்​களை பார்க்க வேண்​டும் என ஆவலுடன் வந்​துள்​ளேன். என்னை வாழ்த்​தும் உங்​களது நல்ல உள்​ளம், எனக்​கும் உங்​களுக்​கும் இருக்​கும் உறவு எப்​போதும் மாறாது. இவ்​வாறு பேசி​னார்.

அரசி​யல் துறவறம் பூணுகிறேன் என ராம​தாஸ் கூறிய​போது, எவ்​வித​மான உணர்​வு​களை வெளிப்​படுத்​தாமல் மேடை​யில் அன்​புமணி அமை​தி​யாக காணப்​பட்​டார்.

அவரது உடல்​மொழி மூல​மாக ராம​தாஸின் அரசி​யல் ஓய்வு அறி​விப்பு என்​பது குடும்​பத்​தினருடன் ஏற்​கெனவே கலந்து பேசி திட்​ட​மிட்​டு, நிதான​மாக எடுக்​கப்​பட்ட முடி​வாக பார்க்​கப்​படு​கிறது. 47 ஆண்​டு​கள் பயணம், 96 ஆயிரம் கிராமங்​களுக்கு சென்று வந்த பாதங்​கள் என அடிக்​கடி கூறிய ராம​தாஸின் அரசி​யல் அத்​தி​யா​யம் என்​பது நிறைவு பெற்​ற​தாக அவரது கட்சி வட்​டாரங்​கள் தெரி​விக்​கின்​றன.

spot_imgspot_img

More like this
Related

உணவக உரிமையாளர் சுட்டுககொலை: 2 பேர் கைது!

பெல்லன்விலவில் உணவக உரிமையாளர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தில் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் இருவர்,...

இந்தியா தப்பிச்சென்றவர்களுக்கு வத்தளை துப்பாக்கிச்சூட்டுடன் தொடர்பு?

சட்டவிரோதமாகப் படகில் தனுஷ்கோடி சென்ற இரு இலங்கையர்களும் அண்மையில் வத்தளையில் இடம்பெற்ற...

‘விஸ்வநாத் அண்ட் சன்ஸ்’ தெலுங்கு படம் அல்ல

தமிழ், தெலுங்​கில் வெற்​றி​பெற்ற ‘லக்கி பாஸ்​கர்’ படத்​துக்​குப் பிறகு, வெங்கி அட்​லூரி...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்