யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதனைக் கைது செய்வதற்கான பிடியாணை பிறப்பிக்க கோட்டை நீதவான் நீதிமன்றம் நேற்று (24) உத்தரவிட்டது.
கோட்டை பொலிஸ் உத்தியோகத்தர்களின் கடமைக்கு இடையூறு விளைவித்ததாக அவர் மீதான வழக்கு விசாரணைக்கு அழைக்கப்பட்டபோது, அவர் நீதிமன்றத்தில் ஆஜராகத் தவறியதே இதற்குக் காரணம்.
வழக்கு விசாரணைக்கு அழைக்கப்பட்டபோது, பாராளுமன்ற உறுப்பினரோ, அவர் சார்பில் சட்டத்தரணிகளோ நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை என்று தெரிவிக்கப்படுகிறது.
அதன்படி, பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதனைக் கைது செய்வதற்கான பிடியாணை பிறப்பிக்க கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டது.




