கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது இந்த வருடத்தில் வீட்டுக்குள் நடக்கும் விபத்துக்களின் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இன்று சுகாதார மேம்பாட்டு பணியக வளாகத்தில் ஊடகங்களுடன் பேசிய,
தொற்றுநோயற்ற நோய்கள் பிரிவின் நிபுணர் வைத்தியர் சமித சிறிதங்க,
கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த நீண்டகால பயணக் கட்டுப்பாடுகளின் விளைவாக மக்கள் தங்கள் வீடுகளில் அடைத்து வைக்கப்பட்டிருப்பதே விபத்துக்கள் அதிகரிப்பதற்கு முக்கிய காரணம் என்றார்.
வீட்டு விபத்துக்களில் பெரும்பாலானவை விலங்கு கடியால் பாதிக்கப்பட்ட சம்பவங்களாகும். இந்த எண்ணிக்கை கடந்த ஆண்டை விட 60 முதல் 69 சதவீதமாக அதிகரித்துள்ளது.
வீட்டுக்குள் ஏற்பட்ட விபத்துக்களில், விழுந்து ஏற்பட்ட காயங்களும் அதிகமாக உள்ளன. இது 2020 உடன் ஒப்பிடும்போது 50 முதல் 72% வரை அதிகரித்துள்ளது.
இருப்பினும் கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது வீதி விபத்துகளின் எண்ணிக்கை குறைந்துள்ளது என்று தெரிவித்தார்.




