எங்களை கரப்பான்பூச்சி என்று அழைத்த தலைமை நீதிபதி சூர்யகாந்துக்கு நன்றி: அபிஜித் திப்கே

Date:

எங்​களை கரப்​பான் பூச்​சிகள் என்று அழைத்த தலைமை நீதிபதி சூர்​ய​காந்​துக்கு நன்றி என்று அபிஜித் திப்கே தெரி​வித்​துள்​ளார். சிஜேபி நிறு​வனர் அபிஜித் திப்கே நேற்று கூறும்​போது, “உச்ச நீதி​மன்ற தலைமை நீதிபதி சூர்ய காந்துக்கு நான் நன்றி தெரிவிக்க விரும்​பு​கிறேன்.

அவர் எங்​களைக் கரப்​பான்​பூச்​சிகள் என்று அழைக்​காமல் இருந்​திருந்​தால், நான் இந்​தி​யா​வுக்கு வந்​திருக்க மாட்​டேன். இந்த இயக்​கத்தை தொடங்கி இருக்க மாட்​டேன்” என்​றார்.

தனக்கு மூத்த வழக்​கறிஞர்​ அந்தஸ்து வழங்க டெல்லி உயர் நீதிமன்றத்துக்கு உத்தரவிடக் கோரி ஒருவர் தாக்கல் செய்த மனு மீது, கடந்த மே 15-ம் தேதி உச்ச நீதி​மன்​றத்​தில் விசா​ரணை நடை​பெற்​றது.

அப்​போது, தலைமை நீதிபதி சூர்​ய​காந்த் “வேலை இல்​லாத இளைஞர்​கள் சிலர், சமூக ஊடகங்​களில் தேவை​யில்​லாத கருத்​துகளைப் பரப்​பு​கின்​றனர். சமூக ஆர்​வலர்​கள் என்று கூறி கொள்​ளும் அவர்​கள், கரப்​பான் பூச்​சிகளைப் போன்​றவர்​கள்” என்று கருத்து தெரி​வித்​தார்.

அந்த வழக்கறிஞரின் சமூக வலைதளப் பதிவுகளைக் கண்டித்த தலைமை நீதிபதி, துறையில் முறையான வேலைவாய்ப்பும் இடமும் இல்லாமல் போலிச் சட்டப் பட்டங்களைப் பெற்றுக்கொண்டு, சமூக ஊடகங்கள் மற்றும் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் (ஆர்டிஐ) மூலம் அமைப்புகளைத் தாக்குபவர்களைக் குறிப்பிடும் வகையில் அந்த உவமையைப் பயன்படுத்தினார். இந்தக் கருத்து சமூக ஊடகத்தில் வேகமாக பரவியது.

புதிய அமைப்பு தொடக்கம்

அடுத்த நாள் மே 16-ம் தேதி, அமெரிக்​கா​வில் இருந்த அபிஜித் திப்​கே, ‘கரப்​பான்​பூச்சி ஜனதா கட்​சி’ தொடங்​கப்​பட்​ட​தாக எக்ஸ் தளத்​தில் அறி​வித்​தார். மேலும், இந்த அமைப்​பில் இணைய வேலை​வாய்ப்​பற்​றவ​ராக​வும், சோம்​பேறி​யாக​வும், எப்​போது இணை​யத்​தில் இருப்​பவ​ராக​வும், தொழில்​முறை​யாகக் குதர்க்கமாகப் பேசக் கூடிய​வ​ராக​வும் இருக்க வேண்​டும் என்று அறி​வித்திருந்​தார்.

இதையடுத்து, கரப்​பான்​பூச்சி பெயரில் சமூக வலை​தளங்​களில் பல்​வேறு ஆதரவு கருத்​துகள் வந்​தன. அதன்​பின், நீட் வி​னாத்​தாள் கசிவைக் கண்​டித்து டெல்லி ஜந்​தர் மந்​தரில் அபிஜித் போ​ராட்​டம் அறி​வித்​தது குறிப்​பிடத்​தக்​கது.

spot_imgspot_img

More like this
Related

ரஷ்யா, உக்ரைன், அமெரிக்கா முத்தரப்பு பேச்சு விரைவில்

உக்ரைன், அமெரிக்கா மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகள் பங்கேற்கும் முத்தரப்பு அமைதிப்...

நாடாளுமன்ற குடியிருப்பை பெற்றவர்களின் விபரம்

கோட்டையில் உள்ள மாதிவெல நாடாளுமன்ற உறுப்பினர் குடியிருப்பு வளாகத்தில், தற்போதைய நாடாளுமன்றத்தைச்...

சிஐடியினர் அநுராதபுரம் சென்றால் முழு திருடர்களையும் ஒரே மேடையில் பிடித்திருக்கலாம்!

அனுராதபுரத்தில் நடைபெற்ற பொதுஜன பெரமுன தலைமையிலான பேரணியையும் ராஜபக்ச குடும்பத்தையும் விமர்சித்த...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்