மலேசியா நாட்டில் கொரோனா பாதிப்பு 4ஆயிரத்துக்கு கீழே குறையும் வரையில் லொக்டவுன் நீட்டிக்கப்படும் என்று அறிவித்துள்ள மலேசியப் பிரதமர் முகைதீன் யாசின், தற்போது அமலில் உள்ள ஊரடங்கை மேலும் 2 வாரத்துக்கு நீட்டிப்பு செய்துள்ளார்.
உலகம் முழுவதும் கொரோனா 2வது அலை பரவி வருகிறது. சில நாடுகளில் கட்டுக்குள் வந்தாலும் பல நாடுகளில் தொடர்ந்துகொண்டிருக்கிறது. தொற்று பரவலை கட்டுப்படுத்த தடுப்பூசிகள் செலுத்தும் பணிகளும் தீவிரமடைந்து வருகின்றன.
மலேசியாவில், தொற்று பரவலை தடுக்கும் வகையில் ஏற்கவே அறிவிக்கப்பட்ட 2 வாரம் ஊரடங்கு, அதாவது ஜூன் 15ந்தேதியில் இருந்து 28ந்தேதி வரையிலான பொதுமுடக்கம் இன்றுடன் முடிவடைகிறது. இந்த நிலையில், மேலும் 2 வாரத்துக்கு ஊரங்கை அந்நாட்டு பிரதமர் நீட்டித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,
மலேசியாவில் ஒருநாள் கொரோனா பாதிப்பு 4,000க்கும் குறை‘வாகப் பதிவாகும் வரையிலும் தடுப்பூசி, தீவிர சிகிச்சைப் பிரிவு படுக்கைப் பயன்பாடு தொடர்பான இலக்குகள் எட்டப்படும் வரையிலும் முழு ஊரடங்கு நீட்டிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
மலேசியாவில் கடந்த 4 வாரங்களாக ஊரடங்கு அமலில் உள்ளது. அங்கு தினசரி கொரோனா பாதிப்பு 5ஆயிரத்துக்கு மேல் இருந்து வருகிறது. இந்த நிலையில், தற்போது மேலும் 2 வாரம் ஊரடங்கு நீடிக்கப்பட்டு உள்ளது. அத்துடன் தினசரி பாதிப்பு 4ஆயிரம் ஆக குறையும் வரையில் ஊரடங்கு நீட்டிக்கப்படும் என்றும், வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நிவாரணம் குறித்து பின்னர் அறிவிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
எற்கனவே கடந்த மாதம் கடந்த மாதம் 30ஆம் தேதி 40 பில்லியன் ரிங்கிட் (S$12.9 பில்லியன்) மதிப்பிலான நிதியுதவித் திட்டம் அறிவிக்கப்பட்டது. இனிமேல் அறிவிக்கப்படும் நிவாரணத் திட்டம் மேலும் விரிவானதாக இருக்கும் என்றும் பிரதமர் முகைதீன் சுட்டிக்காட்டியுள்ளார்.
புதிய உதவித்திட்டம் குறித்த அறிக்கை இன்று, அல்லது நாளை வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
‘மலேசிய மக்கள் தொகையில் 6.2 சதவிகிதம் பேரே தடுப்பூசி எடுத்துக்கொண்டுள்ளதாகவும், ஜூலை மாதம் நடுப்பகுதிக்குள் 10சதவிகிதம் பேர் தடுப்பூசி போட்டிருக்க வேண்டும் என இலக்கு நிர்ணயிக்கப்பட்டு இருப்பதாக அந்நாட்டின் தடுப்பூசி ஒருங்கிணைப்பு அமைச்சர் கைரி ஜமாலுதீன் தெரிவித்துள்ளார்.