சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரை வந்து கைவசம் நிறைய படங்களுடன் வளரும் இளம் நடிகைகள் பட்டியலில் இருப்பவர் நடிகை ப்ரியா பவானி சங்கர். சமூக வலைத்தளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் ப்ரியா, அவ்வப்போது ரசிகர்களின் கேள்விகளுக்கும் கலகலப்பாக பதிலளிப்பார். இந்நிலையில் தன்னை தானே கலாய்த்து கொண்டு நடிகை ப்ரியா பவானி சங்கர் பகிர்ந்துள்ள புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.
தமிழ் திரையுலகில் தற்போது பிசியான நடிகைகளில் ஒருவராக திகழ்பவர் நடிகை ப்ரியா பவானி சங்கர். இவர் தற்போது சுமார் பத்து படங்களுக்கு மேல் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. எப்போதும் சமூக வலைத்தளத்தில் படு ஆக்ட்டிவாக இருக்கும், பிரியா பவானி ஷங்கர், இந்த ஊரடங்கு நேரத்தில் ஒர்க் அவுட் மூலம் உடல் எடையை குறைத்து செம்ம ஸ்லிம்மாக மாறியுள்ளார். இது குறித்த புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்தார்.
இந்நிலையில் தற்போது ஜிம்மில் ஒர்க்கவுட் செய்து கொண்டிருப்பதை போன்ற புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படத்தில் கயிற்றில் அந்தரத்தில் தொங்கியபடி, கியூட் ஒன்றை உதிர்த்து‘ஹேய் நல்லா சர்க்கஸ் பண்றே மேன் நீ’ என தன்னை தானே கலாய்த்துக்கொண்டுள்ளார். அவரின் இந்த புகைப்படத்திற்கு ரசிகர்கள் பலரும் பலவிதமாக கமெண்ட் செய்து கலாய்த்து வருகின்றனர். இந்நிலையில் ப்ரியா பவானி ஷங்கரின் இந்த இன்ஸ்டாகிராம் பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.
ப்ரியா பவானி சங்கர் தற்போது பொம்மை, ஹரி இயக்கத்தில் அர்ஜுன் விஜய்யுடன் ஒரு படம், இந்தியன் 2 , சிம்பு கெளதம் கார்த்திக் நடிப்பில் உருவாகும் பத்து தல உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் அந்தரத்தில் தொங்கியபடி ப்ரியா பவானி ஷங்கர் பகிர்ந்துள்ள புகைப்படம் ரசிகர்கள் மத்தியில் லைக்குகளை குவித்து வருகிறது.