பசில் ராஜபக்ஷ நாடாளுமன்ற உறுப்பினராக பதவியேற்பதற்கு வழியேற்படுத்த, பொதுஜன பெரமுனவின் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் பண்டார தனது பதவியை துறக்கவுள்ளதாக வெளியான செய்திகளை அவர் மறுத்துள்ளார்.
இந்த விஷயத்தில் ஒரு முன்மொழிவு முன்வைக்கப்படவில்லை, இது தொடர்பாக விவாதங்களும் நடைபெறவில்லை என தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவிலிருந்து நேற்று நாடு திரும்பிய பசில் ராஜபக்ஷ, ஜூலை 6 ஆம் திகதி தேசிய பட்டியல் எம்.பியாக சத்தியப்பிரமாணம் செய்ய தயாராகி வருவதாக ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
பின்னர் பசில், பொருளாதார அபிவிருத்தி அமைச்சராக பதவியேற்பார் என்றும் செய்திகள் வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1