வவுனியா ஆடைத்தொழிற்சாலையில் தடுப்பூசி செலுத்தியவர்களிற்கும் ஒவ்வாமை!

Date:

வவுனியா, இராசேந்திரங்குளம் ஆடைத் தொழிற்சாலையில் கோவிட் தடுப்பூசி ஏற்றப்பட்ட 15 பேர் ஒவ்வாமை காரணமாக ஆடைத் தொழிற்சாலை சிகிச்சை கூடம் மற்றும் வவுனியா வைத்தியசாலையில் இன்று (25) அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

வவுனியாவில் அமைந்துள்ள ஆடைத் தொழிற்சாலைகளில் பணியாற்றுபவர்களுக்கு இராணுவத்தினர் ஊடாக சினாவின் தயாரிப்பான சினோஃபார்ம் தடுப்பூசிகள் ஏற்றப்பட்டு வருகின்றன. இதன்போது 15 பேர் ஒவ்வாமை காரணமாக பாதிக்கப்பட்டு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அதில், வவுனியா, இராசேந்திரங்குளம் ஆடைத் தொழிற்சாலையில் பணியாற்றும் சிலர் தடுப்பூசி ஏற்றப்பட்ட நிலையில் ஒவ்வாமை காரணமாக வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அனுமதிக்கப்பட்டவர்களில் பலர் உடல் நிலை சீர்வந்த நிலையில் வீடுகளுக்கும் திரும்பியுள்ளனர்.

இன்னும், சிலருக்கு ஆடைத் தொழிற்சாலையில் உள்ள சிகிச்சை கூடத்தில் சிகிச்சை அளிக்கப்பட்டு வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் சுகாதாரத் துறையினர் தெரிவித்துள்ளனர்.

spot_imgspot_img

More like this
Related

மஹிந்த கூட்டத்தை புகழ்ந்து பாடிய பைத்தியத்தை தெளிய வைப்போம்

யாழ்ப்பாணத்தில்; இருந்து சென்ற ஒரு பைத்தியம் முள்ளிவாய்க்கால் மட்டுமல்ல வடக்கு கிழக்கு...

பாகிஸ்தான் உயர்ஸ்தானிகருடன் அன்வர் எம். முஸ்தபா சந்திப்பு: கிழக்கின் அபிவிருத்தி குறித்து கலந்துரையாடல்

இலங்கைக்கான பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர், ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் டாக்டர் நய்யார் நசீர்...

காரைதீவு பிரதேச சபையின் “உள்ளூராட்சி வாரம் – 2026” நிகழ்வு ஆரம்பம்

அம்பாறை மாவட்டம், காரைதீவு பிரதேச சபையினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள “உள்ளூராட்சி வாரம்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்