அமெரிக்க ஜனாதிபதி பிடன்- ரஷ்ய ஜனாதிபதி புடின் சந்திப்பு!

Date:

அமெரிக்க ஜனாதிபதி ஜோ பிடனுடன், ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினும் இன்று புதன்கிழமை ஜெனீவாவில் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

கடந்த ஜனவரி மாதம் பிடன் பதவியேற்றதிலிருந்து இரு தரப்பிற்குமிடையில் நிலவிய பதற்றமான வார்த்தை பரிமாற்றங்களின் பின்னர், முதல் தடவையாக இரு தலைவர்களும் சந்தித்து பேசியுள்ளனர்.

“எங்கள் சந்திப்பு பலனளிக்கும் என்று நான் நம்புகிறேன்,” புடின் கூறினார், “இன்று சந்திப்பதற்கான இந்த முயற்சிக்கு” அமெரிக்கத் தலைவருக்கு நன்றி தெரிவித்தார்.

அதே நேரத்தில் பிடென் கூறினார்: “நேருக்கு நேர் சந்திப்பது எப்போதும் நல்லது.”

இரு தரப்பு உச்சிமாநாட்டில் எந்தவொரு பெரிய முன்னேற்றத்திற்கும் வாய்ப்பில்லாவிட்டாலும், பதற்றத்தை தணிக்கக்கூடிய- சுமுக நிலைமையை ஏற்படுத்தக் கூடிய விதமாக அமையுமென அவர்கள் நம்புகிறார்கள்.

பிடென், புடின், அமெரிக்க இராஜாங்க செயலர் ஆண்டனி பிளிங்கன் மற்றும் ரஷ்ய வெளிவிவகார அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் ஆகியோர் அடங்கிய கலந்துரையாடல் ஆரம்பிப்பதற்கு முன்னதாக, இருவ தலைவர்களையும் முதலில் சுவிஸ் ஜனாதிபதி வரவேற்றார்.

ஒவ்வொரு பக்கத்திற்கும் ஒரு மொழிபெயர்ப்பாளருடன். இரு தரப்பும் உயர்மட்ட பேச்சை ஆரம்பித்துள்ளனர்.

சைபர் கிரைம் முதல் அமெரிக்காவின் தேர்தல்களில் ரஷ்யாவின் தலையீடு, ஆயுதக் கட்டுப்பாடு மற்றும் உக்ரேனில் ரஷ்யாவின் ஊடுருவல் வரை அனைத்தையும் விவாதிக்க பிடென் மற்றும் புடின் திட்டமிட்டுள்ளனர்.

https://twitter.com/i/status/1405114218370772996

இரு நாடுகளுக்கிடையில்  நிலையான உறவுகளை மீட்டெடுக்க வேண்டியதன் அவசியத்தை இருவரும் வலியுறுத்தியுள்ளனர்.

spot_imgspot_img

More like this
Related

ஐ.ம.ச, ஐ.தே.க கூட்டும் வெற்றி பெறுவது சிரமம்!

ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சக்தி இடையிலான கூட்டணி...

2 நாளில் ஹோர்முஸ் நீரிணையை திறக்க தயார்!

ஈரான் தனது நிபந்தனைகளை அமெரிக்கா ஏற்றுக்கொண்டால், ஹோர்முஸ் நீரிணையை இரண்டு நாட்களுக்குள்...

யாழில் பாடசாலை மாணவர் போக்குவரத்துச் சேவையை நடை முறைப்படுத்த நடவடிக்கை!

யாழ்ப்பாண மாவட்டத்தில் பாடசாலை மாணவர் போக்குவரத்துச் சேவையில் ஈடுபடும் தனியார் வாகனங்களை...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்