ரொனால்ட்டோ தள்ளி வைத்த 2 போத்தல்களால் கொக்கோ கோலா நிறுவனத்திற்கு 4 பில்லியன் டொலர் இழப்பு!

Date:

போர்த்துக்கல் கால்பந்து வீரர் கிறிஸ்டினா ரொனால்டோ செய்தியாளர் சந்திப்பின்போது கொக்கோ – கோலா குளிர்பான போத்தலை மேசையிலிருந்து நகர்த்திய செயலால் அந்நிறுவனத்துக்கு சுமார் 4 பில்லியன் டொலர் இழப்பு ஏற்பட்டுள்ளது.

கால்பந்து வீரர்களில் உலகம் முழுவதும் தனக்கெனப் பெரும் ரசிகர் பட்டாளத்தைக் கொண்டவர் ரொனால்டோ. இந்த நிலையில் யூரோ கால்பந்தாட்டத் தொடரில் நேற்று ஹங்கேரி அணியும், போர்த்துக்கல் அணியும் மோதின. இதற்கு முன்னதாக பத்திரிகையாளர் சந்திப்பில் போர்த்துக்கல் அணியின் கப்டன் ரொனால்டோ பங்கேற்றார். அப்போது அவரது மேசைக்கு முன்னர் தண்ணீர் போத்தல்களுடன் இரண்டு கொக்கோ – கோலா போத்தல்களும் வைக்கப்பட்டிருந்தன.

இதனைக் கண்ட ரொனால்டோ இரண்டு கொக்கோ -கோலா போத்தல்களையும், நகர்த்தி தனது முன்னால் இருந்த தண்ணீர் போத்தலை எடுத்து என்னிடம் தண்ணீர் உள்ளது என்று காட்டினார்.

ரொனால்டோவின் இந்தச் செயல் காரணமாக கொக்கோ -கோலா நிறுவனத்தின் சந்தை மதிப்பு நேற்று வீழ்ச்சி அடைந்தது.

டொனால்டோ செய்தியாளர் சந்திப்பின்போது கொக்கோ – கோலா குளிர்பான போத்தலை மேசையிலிருந்து நகர்த்திய செயலால் அந்நிறுவனத்துக்கு சுமார் 4 பில்லியன் டொலர் இழப்பு ஏற்பட்டுள்ளது.

Share post:

spot_imgspot_img

More like this
Related

ஈரான் யுரேனியத்தின் கதி என்னவாகும்?

சுமார் 10 அணு குண்டுகளைத் தயாரிக்கப் போதுமான அளவு அதிக செறிவூட்டப்பட்ட...

விஜய் வேட்புமனுவில் சொத்து மதிப்பை குறைத்துக் காட்டியது முறைகேடானது: உயர் நீதிமன்றம்

இரு தொகுதிகளில் வேட்பு மனு தாக்கல் செய்த தவெக தலைவர் விஜய்,...

ஹிரு மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை

ஹிரு மீடியா நெட்வொர்க் மற்றும் ஆசியா பிராட்காஸ்டிங் கார்ப்பரேஷன் (பிரைவேட் லிமிடெட்)...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்