29.5 C
Jaffna
March 28, 2024
இலங்கை

பாடசாலைகள் எப்போது மீள திறக்கும்?: கல்வியமைச்சர் தகவல்!

நாட்டில் பொருத்தமான சூழல் ஏற்பட்டவுடன் பாடசாலைகளை மீண்டும் திறக்கவுள்ளதாக கல்வி அமைச்சர் ஜி.எல். பீரிஸ் தெரிவித்துள்ளார்.

பாடசாலைகளை மீண்டும் திறப்பதற்கான ஒரு பொறிமுறையை உருவாக்கும் முயற்சியில் இன்று சிறப்பு மருத்துவர்களுடன் கலந்துரையாடினதாக அமைச்சர் பீரிஸ் கூறினார்.

ஊடகங்களுடன் பேசிய அமைச்சர், வகுப்பு அறை அடிப்படையிலான கல்விக்கு மாற்று வழி இல்லாததால் பாடசாலைகளை மீண்டும் திறக்க அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருவதாகக் கூறினார்.

இருப்பினும் மீண்டும் பாடசாலைகளை திறப்பது ஒரு முறையான திட்டத்தின் கீழ் இருக்க வேண்டும், அதற்கு முன்னர் ஆசிரியர்களுக்கு தடுப்பூசி போடப்பட வேண்டுமென அவர் கூறினார்.

கல்வித்துறைக்குள் உள்ள அனைத்து அதிபர்கள், பிரதி அதிபர்கள், ஆசிரியர்கள் மற்றும் பிற நிர்வாக ஊழியர்களுக்கு தடுப்பூசி போடுவதற்கு 249,613 தடுப்பூசிகள் தேவை என்று கூறினார்.

பாடசாலைகளை மீண்டும் திறப்பதற்கு முன்பு 29,407 கல்விசாரா ஊழியர்களுக்கும் தடுப்பூசி போட வேண்டும். பாடசாலைகளை திறப்பதென்றால், மொத்தம் 279,020  கோவிட் -19 தடுப்பூசி தேவை என்று கூறினார்.

நிர்வாக ஊழியர்களுக்கு தடுப்பூசி போடுவது அவர்களை பாடசாலைகளுக்குச் செல்ல ஊக்குவிக்கும் என்றும், ஒன்லைன் அடிப்படையிலான முறையைத் தொடர்வதற்குப் பதிலாக பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை வகுப்பறைகளுக்கு அனுப்புவதில் மகிழ்ச்சியடைவார்கள் என்றும் அமைச்சர் கூறினார்.

மாணவர்களின் போக்குவரத்து  வழிகள் குறித்தும் விவாதங்களை நடத்தி வருவதாகக் கூறினார்.

What’s your Reaction?
+1
3
+1
1
+1
1
+1
2
+1
0
+1
0
+1
1

இதையும் படியுங்கள்

மசாஜ் நிலைய பெண்கள் இருவருக்கு எயிட்ஸ்: கலக்கத்தில் வாடிக்கையாளர்கள்!

Pagetamil

கிராண்ட்பாஸில் தீப்பற்றிய டயர் கடை!

Pagetamil

வவுனியாவில் சடலமாக மீட்கப்பட்ட இளம் யுவதி!

Pagetamil

யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு கூட்டம்

Pagetamil

தனிநபர் செலவீனம் அதிகரிப்பு

Pagetamil

Leave a Comment