நடிகர் அஜீத் வீட்டிற்கு வெடிகுண்டு வைத்துள்ளதாக மர்ம நபர் மிரட்டல் விடுத்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
சமீபகாலமாக மர்ம நபர்கள் பிரபலங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுவது என்பது சர்வ சாதாரணமாகி விட்டது. அரசியல் தலைவர்கள், முக்கிய பிரபலங்கள், சினிமா நட்சத்திரங்கள் உள்ளிட்டவர்களை குறிக்கும் மர்ம நபர்கள் தொலைபேசி வழியாக மிரட்டல் விடுக்கின்றனர். போலீசாரும் தொலைபேசி எண்ணை வைத்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.
ஏற்கனவே முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, நடிகர்கள் ரஜினிகாந்த், கமல், விஜய், அஜீத் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்களுக்கு போன் செய்து வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டு பரபரப்பை ஏற்படுத்தியது. பின்னர் போலீசார் விசாரணையில் அது வெறும் புரளி தெரிய வந்தது.
இந்நிலையில் நடிகர் அஜித்குமாருக்கு இன்று மர்ம நபர் ஒருவர் வெடிகுண்டு மிரட்டல் விடுத்தார். சென்னை திருவான்மியூர் உள்ள நடிகர் அஜீத்குமாரின் வீட்டில் வெடிகுண்டு வைத்துள்ளதாக காவல்துறை கட்டுபாட்டு அறைக்கு தொடர்பு கொண்டு அந்த மர்ம நபர் பேசியுள்ளார். இது குறித்து போலீசார் விசாரணை செய்தபோது வழக்கம்போல் அது புரளி என தெரிய வந்துள்ளது.