பிக் பாஸ் ஆரவ் கொரோனா லாக்டவுனில் தெரு நாய்க்கு பிஸ்கட் போட்டுருக்கிறார். அதை அவரே வீடியோ எடுத்து ட்விட்டரில் வெளியிட்டு அனைவருக்கும் ஒரு கோரிக்கையும் வைத்திருக்கிறார். லாக்டவுனில் உணவின்றி தவிக்கும் தெரு நாய்களுக்கு உணவு வழங்கும்படி நடிகர் ஆரவ் கேட்டுக்கொண்டிருக்கிறார்.
பிக் பாஸ் முதல் சீசனில் டைட்டில் ஜெயித்தவர் ஆரவ். அவர் அதற்கு முன்பு சைத்தான் உள்ளிட்ட சில படங்களில் நடித்து இருந்தாலும், பாப்புலர் ஆக்கியது பிக் பாஸ் நிகழ்ச்சி தான்.பிக் பாஸுக்கு பிறகு ஆரவ் சினிமாவில் மட்டும் கவனம் செலுத்தி வருகிறார்.
இந்நிலையில் கொரோனா லாக்டவுனில் ஆரவ் நாய்களுக்கு உணவளித்து இருக்கிறார். ஒரு நாய்க்கு அவர் பிஸ்கட் போட்டு இருப்பதை வீடியோ எடுத்து வெளியிட்டு இருக்கிறார். மேலும் இந்த லாக்டவுனில் உணவின்றி தவிக்கும் நாய்களுக்கு உணவு மட்டும் தண்ணீர் வழங்குங்கள் என அனைவரையும் கேட்டுக்கொண்டிருக்கிறார் அவர்.