அந்த வீடியோ வெளியான போது பொது வெளியில் தலைக்காட்ட பயந்தேன்: ராதிகா ஆப்தே!

Date:

தன்னுடைய அந்தரங்க வீடியோ வெளியான போது தனது மனநிலை எப்படி இருந்தது என்றும், அதிலிருந்து எப்படி மீண்டு வந்தேன் என்றும் நடிகை ராதிகா ஆப்தே சமீபத்திய பேட்டி ஒன்றில் கூறியுள்ளது வைரலாகி வருகிறது.

தமிழில் ரஜினிகாந்த் ஜோடியாக கபாலி மற்றும் வெற்றிச்செல்வன், தோனி படங்களில் நடித்துள்ள ராதிகா ஆப்தே இந்தியில் முன்னணி நடிகையாக இருக்கிறார். எந்த கேரக்டர் கொடுத்தாலும், தனக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதாபாத்திரங்கள் கிடைத்தாலும் துணிந்து நடித்து வருபவர் ராதிகா ஆப்தே. இந்நிலையில் தன்னுடைய கடந்த கால சினிமா வாழ்வில் ஏற்பட்ட சில கசப்பான சம்பவங்கள் குறித்து பேட்டி ஒன்றில் மனம் திறந்து பேசியுள்ளார்.

கடந்த 2005ம் ஆண்டு இந்தியில் வெளியான வா லைஃப் ஹோ டோ ஹைசி படத்தின் மூலம் சினிமாவிற்கு அறிமுகமானவர் ராதிகா ஆப்தே. ராம் கோபால் வர்மா இயக்கத்தில் 2010ம் ஆண்டு வெளியான ரத்த சரித்திரம் திரைப்படத்தில் நடித்து பிரபலமானார். ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி ஜோடியாக கபாலி திரைப்படத்தில் நடித்தார். இந்த படத்தில் இவரின் எதார்த்தமான நடிப்பு ரசிகர்களிடம் பாராட்டுக்களையும், வரவேற்பையும் பெற்றது.

கடந்த 2015ம் ஆண்டு பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கன் தயாரிப்பில் வெளியான பார்ச்சட் படத்தில் பாலியல் தொழிலாளியாக நடித்திருந்தார் ராதிகா ஆப்தே. அந்த படத்தில் பெண் ஒருவருடன் உறவு கொள்ளும் காட்சியில் ஆடைகளை களைந்து மேலாடையின்றி நடித்து பாலிவுட் சினிமாவையும், ரசிகர்களையும் கதிகலங்க செய்திருந்தார். அதன்பின்னர் ராதிகா ஆப்தேவின் நிர்வாண வீடியோ ஒன்று இணையத்தில் லீக் ஆகி பரபரப்பை கிளப்பியது. இந்நிலையில் அந்த வீடியோ வெளியான போது ஏற்பட்ட மன வலிகள், எதிர்கொண்ட சவால்கள் குறித்து பேட்டி ஒன்றில் மனம் திறந்து பேசியுள்ளார் ராதிகா ஆப்தே.

அதில், முதல் நாலு நாள் வெளியவே தலை காட்டவில்லை என்றும். மீடியாவுக்கு பயந்து அப்படி செய்யவில்லை என்றும், முதலில் என் கார் டிரைவர், வீட்டில் வேலை செய்பவர்கள், நண்பர்கள், உறவினர்கள் என யாராவது அந்த வீடியோவை பார்த்து இருப்பார்களோ என்கிற அச்சம் தான் மனம் முழுவதும் நிறைந்திருந்தது என்றும் தெரிவித்துள்ளார். நிர்வாண வீடியோ லீக் ஆனதை விட அந்த வீடியோவை வைத்து தன்னை ஷோசியல் மீடியாவில் மோசமாக ட்ரோல் செய்ததைத் தான் தன்னால் தாங்கவே முடியவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் அந்த பேட்டியில், ‘ராம்கோபால் வர்மா இயக்கிய ரத்த சரித்திரம் படத்தில் ஏமாற்றப்பட்டேன். எதிர்பார்த்த சம்பளம் தரவில்லை. படப்பிடிப்பை திட்டமிட்ட நேரத்தில் தொடங்காமல் எனது நேரத்தையும், திறமையையும் வீணாக்கினார்கள். அதில் ஏற்பட்ட அனுபவம் நான் ஒதுக்கும் நேரத்தை சரியாக பயன்படுத்த வேண்டும் என்பதில் என்னை உறுதியாக இருக்க வைத்தது’. இதையெல்லாம் கடந்து தான் சினிமாவில் தொடர்ந்து நடித்து வருகிறேன் என தெரிவித்துள்ளார் ராதிகா ஆப்தே.

spot_imgspot_img

More like this
Related

TGTE’s Tamil Olympics – News

தமிழ் ஒலிம்பிக் 2027 திட்டத்தை அங்குரார்ப்பணம் செய்தது நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்! நாடுகடந்த...

ஓமானிலிருந்து ‘தூக்கி வரப்பட்ட’ பிரபல குண்டர் தலைவன்!

மட்டக்குளியில் பல கொலைகள் மற்றும் கொலை முயற்சிகளில் ஈடுபட்ட, குறிப்பாக சஞ்சீவ...

பசிலின் பணத்தை பறிமுதல் செய்ய நீதிமன்றம் உத்தரவு!

மாத்தறையில் 1.5 ஏக்கர் நிலத்தை முறைகேடாகப் பெறப்பட்ட நிதியைப் பயன்படுத்தி வாங்கியதாகக்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்