ஆடைத் தொழிற்சாலைகளை கட்டுப்படுத்தும் அதிகாரம் சுகாதார அதிகாரிகளிற்கே கிடையாது: வடக்கில் அடுத்த கொத்தணியை உருவாக்கும் அபாயமுள்ள ஆடைத் தொழிற்சாலை இதுதான்!

Date:

வவுனியாவில் அமைந்துள்ள ஆடைத் தொழிற்சாலைகள் சுகாதார தரப்பினரின் வழிகாட்டுதல்களை பின்பற்றத் தவறுகின்றமையால் பாரிய தொற்றுப்பரவல் ஏற்படுவதற்கான வாய்ப்புக்கள் உள்ளதாக வவுனியா சுகாதார வைத்திய அதிகாரி யூட் பீரிஸ் தெரிவித்தார்.

வவுனியாவில் அதிகரித்து வரும் கொரோனா தொற்றுநோயின் சமகால நிலவரம் தொடர்பான விசேட கலந்துரையாடல் ஒன்று மாவட்ட செயலகத்தில் இன்று இடம்பெற்றது. இதில் கருத்து தெரிவித்த போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,

பொருளாதார நோக்கம் இருப்பதால் அரசாங்கத்தின் கொள்கையின் பிரகாரம் ஆடைத்தொழிற்சாலைகள் இயங்குகின்றது. அதனை நிறுத்துவதற்கான அதிகாரம் எமக்கில்லை. எனினும் தொடர்ச்சியாக ஆடைத் தொழிற்சாலைகளில் கள ஆய்வுகளை முன்னெடுத்துள்ளோம். எமது கருத்துக்களை அவர்கள் செவிமடுப்பதாக தெரியவில்லை. குறிப்பாக ஒமேகாலைன் ஆடைத்தொழிற்சாலையானது ஒரு கட்டிடத்திற்குள்ளேயே இயங்குகின்றது. 2500 ற்கும் மேற்பட்ட ஊழியர்கள் அங்கு கடமைபுரிகின்றனர்.

ஆடைத்தொழிற்சாலைகள் சில நடைமுறைகளை பின்பற்றாமையினால் பாரிய பரவல் ஒன்று ஏற்படுவதற்கான சந்தர்ப்பங்கள் இருக்கிறது. எனவே அனைவரையும் ஒரே நேரத்தில் வேலைக்கு அழைக்காமல் வேலைநேரத்தில் சுழற்சி முறையில் மாற்றத்தினை ஏற்படுத்தி இயங்கலாம்.

அத்துடன் வெளிமாவட்டங்களில் உள்ள ஆடைத் தொழிற்சாலைகளில் பணிபுரிவோர் அன்ரியன் பரிசோதனையினை தனியார் வைத்தியசாலைகளில் கட்டணத்திணை செலுத்தி முன்னெடுக்கின்றனர். ஆனால் இங்குள்ள தொழிற்சாலைகள் அனைத்தும் சுகாதார திணைக்களத்தினையே சார்ந்திருக்கின்றார்கள்.

நாம் இது தொடர்பாக பலமுறை தெளிவூட்டல்களை வழங்கியும் அவர்கள் அதனை கடைப்பிடிக்கவில்லை. இது ஒரு பின்னடைவே. இது பாரிய பாதிப்பினையும் ஏற்ப்படுத்தும் என்பதை கூறிக்கொள்கின்றேன் என்றார்.

spot_imgspot_img

More like this
Related

கொழும்பில் மிரட்டிய சீன ரௌடி கைது!

கொழும்பு துறைமுக நகரத் திட்டத்தில் முதலீடு செய்ய வருபவர்களை அச்சுறுத்தி பணம்...

மஹிந்தவின் சகாவிற்கு வரும் விசித்திர நோய்: நீதிமன்றில் நடந்த சுவாரஸ்யம்!

முன்னாள் அமைச்சர் ரோஹித போகொல்லகமவின் பிணை மனுவை நேற்று (13) நிராகரித்த...

அம்மாவும் அப்பாவும் படுக்கையில்: பிணை கோரும் நாமல்!

சர்ச்சைக்குரிய ஏர்பஸ் (Airbus) ஒப்பந்தம் தொடர்பில் ரூ. 100 மில்லியன் இலஞ்சம்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்