மட்டக்களப்பு திராய்மடு பிரதேசத்தில் பெண் ஒருவரின் கையை பிடித்து இழுத்து பாலியல் துஷ்பிரயோகம் செய்ய முயற்சித்த சம்பவத்தில் கைது பொலிஸ் நிலைய சிறையில் அடைக்கப்பட்ட போதைப்பொருள் மற்றும் கசிப்பு வியாபாரியும் 75 மேற்பட்ட குற்ற செயலில் தொடர்புடையவருக்கு நித்திரை செய்ய பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் மெத்தை வழங்கியுள்ளார். இந்தனை வன்மையாக கண்டிப்பதாக மட்டு ஊழல் மோசடி மற்றும் போதை பொருளுக்கு எதிரான அமைப்பின் ஊடக பேச்சாளர் அந்தனிசில் ராஜ்குமார் தெரிவித்தார்.
மட்டு ஊழல் மோசடி மற்றும் போதை பொருளுக்கு எதிரான அமைப்பின் ஊடகவியலாளர் மாநாடு நேற்று ஞாயிற்றுக்கிழமை (11) பாலைமீன்மடு இடம்பெற்ற போது அவர் இவ்வாறு தெரிவித்தார்
கொக்குவில் பொலிஸ் பிரிவிலுள்ள திராய்மடு பகுதியில் நீண்ட காலமாக சில பொலிசாரின் அனுசரணையுடன் சட்டவிரோத கசிப்பு வியாபாரம் இடம் பெற்று வருவதால் இந்த பகுதி மக்கள் வாழ முடியாத நிலையில் கடந்த 3ம் திகதி பொலிஸாருக்கு எதிராக ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தினார்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் எமது அமைப்பின் தலைவர் ஓய்வு பெற்ற கிராம உத்தியோகத்தரும் பாலமீன்மடு பிரதேச பிரைஜா பொலிஸ் குழு தலைவருமான முத்துலிங்கத்துடன் நானும் கலந்து கொண்ட போது மக்கள் இந்த கசிப்பு வியாபாரம் தொடர்பாகவும் பொலிசார் அனுசரணையுடன் இடம்பெறுவதாக முறைப்பாடு செய்து 400 பேர் கையொப்பமிட்டு மகஜர் ஒன்றை தந்தனர்.
இது தொடர்பாக மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் வலித் லீலாரத்ன சந்தித்து இந்த சட்டவிரோத மதுபானம் தொடர்பாக முறையிட்ட அடுத்து அவர் உடனடியாக மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவு பொறுப்பதிகாரி தலைமையில் பொலிஸ் குழு ஒன்றை தந்ததுடன் சட்டவிரோத மதுபான விற்பனையாளருடன் தொடர்புடைய கொக்குவில் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றிய வரும் 3 பொலிஸ் அதிகாரிகளையும் விசாரணை செய்து இடமாற்றுவதாக உறதி மொழி தந்தார்
இதற்கமைய சட்டவிரோத மதுபான விற்பனை தொடர்பாக கடந்த 7ம் திகதி மக்கள் வழங்கிய இரகசிய தகவல் ஒன்றை மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவின் முற்றுகையிட்டு 20 லீற்றர் கசிப்பை மீட்டனர்.
அதனை தொடர்ந்து நேற்று ஞாயிற்றுக்கிழமை திராய்மடு பகுதியில் சட்டவிரோத மதுபான விற்பனையில் ஈடுபட்ட 3 இடங்களை முற்றுகையிட்டு 3 பேரை கைது செய்ததுடன் 39 லீற்றர் கசிப்பு ஒரு மோட்டார் சைக்கிளை மீட்டு கொக்குவில் பொலிசாரிடம் ஒப்படைத்தனர் இதற்கு முதலில் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் மற்றும் மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவு பொறுப்பதிகாரி வரது குழுவினர்களுக்கு நன்றிகளை தெரிவிக்கின்றோம்
அதேவேளை கொக்குவில் பொலிசார் கடந்த முதலாம் திகதி தொடக்கம் நேற்று 11 ம் திகதிவரை அந்த பொலிஸ் பிரிவின் கீழ் உள்ள திராய்மடு கொக்குவில் பிரதேசத்தில் சட்டவிரோத மதுபான விற்பனை செய்பவர்களை பிடிக்காது உள்ளதுடன் அதே பகுதியில் மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவினர் 39 லீற்றர் கசிப்புடன் 3 பேரை கைது செய்துள்ளனர்.
எனவே இந்த பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஒரு சட்டவிரோத மதுபான விற்பனை செய்தவரை பிடிக்காது உள்ளது ஏன்? இவர்கள் கசிப்பு வியாபாரிகளுடன் சம்பந்தப்பட்டுள்ளது இந்த கைதுகள் ஊடாக வெளிச்சத்துக்கு வந்துள்ளது ஆகவே திராய்மடுவில் உள்ள இளைஞர்களே சட்டவிரோத மதுபான வியாபரிகளுடன் உடந்தையாக இருந்து செயற்படுகின்றவர்களதும் மற்றும் இந்த மதுபானங்களை மறைத்துவைக்க வீடுகளை வழங்கியவர்கள் பெயர்கள் பொது மக்களால் வழங்கப்பட்டுள்ளது.
எனவே இந்த சட்டவிரோத மதுபான வியாபாரிகள் மற்றும் போதைப்பொருள் வியாபாரிகளுடன் இந்த திராய்மடு இளைஞர்கள் பங்கு கொள்ள வேண்டாம் என கேட்டுக் கொள்வதோடு எதிர்காலத்தில் இந்த திராய்மடு கிராமத்தில் வசிக்கின்ற இளைஞர்கள் சட்டவிரோத மதுபான வியாபாரிகள் மற்றும் போதைப்பொருள் வியாபாரிகளுடன் சேர்ந்து இயங்கினால் அடுத்து ஊடக சந்திப்பில் அவர்களின் பெயர் விவரங்கள் வெளியிடப்படும் என்றார்




