முடக்கப்பட்டது கிராமம்; இன்றும் ஒரு மரணம்; அரச உத்தியோகத்தர்களிற்கு தடுப்பூசி: யாழ் மாவட்ட கொரோனா ‘அப்டேற்’ தருகிறார் அரச அதிபர்!

Date:

பலாலி வடக்கில் 199 குடும்பங்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் க.ம கேசன் தெரிவித்தார்.

தற்போதைய கொரோனா நிலைமை தொடர்பில் யாழ் மாவட்ட செயலகத்தில் நடாத்திய ஊடகவியலாளர் சந்திப்பின் போது மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

யாழ்ப்பாண மாவட்டத்தில் இறுதியாக கிடைத்த பிசிஆர் பரிசோதனை முடிவின் படி நேற்று 52 நபர்களுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கடந்த ஐந்து, ஆறு நாட்களாக தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 50க்கு மேற்பட்டதாக காணப்படுகின்றது. அதே நேரத்தில் மொத்தமாக 2277 நபர்களுக்கு ஒக்டோபர் மாதத்திற்குப் பின்னர் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இன்றும் ஒரு கொரோனா மரணம் யாழ் மாவட்டத்தில் பதிவாகியுள்ளது. எனவே யாழ்ப்பாண மாவட்டத்தில் கொரோனா தொற்றுக்குள்ளாகி உயிரிழந்தோர் எண்ணிக்கை 28 ஆக உயர்ந்துள்ளது.

இந்த நிலையிலே பலாலி வடக்கு கிராம உத்தியோகத்தர் பிரிவில் தொற்றாளர்கள் அதிகம் இனங்காணப்பட்டதன் அடிப்படையில் அந்தோணி புரம் கிராமத்தினை தனிமைப்படுத்தலுக்குட்படுத்தி இருக்கின்றோம். அதில் 199 குடும்பங்கள் தனிமைப்படுத்த பட்டுள்ளார்கள்.

ஏற்கனவே தனிமைப்படுத்தப்பட்டிருந்த கொடிகாமம் பிரதேசம் விடுவிக்கப்பட்டுள்ளது. யாழில் தற்போதைய நிலையில் 2,123 குடும்பங்களைச் சேர்ந்த 5,249பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்கள். இவர்களுக்கு அரசினால் வழங்கப்படும் இடர் கால நிவாரண உதவியாக 10 ஆயிரம் ரூபா உணவு பொதி தொடர்ச்சியாக வழங்கப்பட்டு வருகின்றது.

பிரதேச செயலகங்கள் ஊடாக அவை வழங்கப்பட்டு வருகின்றன. இலங்கை பூராகவும் பயணத் தடை அரசினால் நடைமுறைப்படுத்தப்படுகிறது. எனவே பயணத்தடை காலப் பகுதியிலே பொதுமக்கள் தமது வீடுகளிலிருந்து பயண தடையினை அனுசரித்து செயற்பட வேண்டும்.

பயண தடையானது பொதுமக்களுடைய பாதுகாப்பினை உறுதி படுத்துவதற்காக தான் அரசாங்கத்தினால் நடைமுறைப்படுத்தப்படுகின்றது. எனவே பொதுமக்கள் இந்த பயண தடையினை அனுசரித்து செயற்பட வேண்டியது அவசியமாகும்.

பொதுமக்கள் தமது நடமாட்டத்தை கட்டுப்படுத்திக் கொள்ள வேண்டும். யாழ்ப்பாண மாவட்டத்தில் சகல ஒன்றுகூடல் நிகழ்வுகள் களியாட்ட நிகழ்வுகள் யாவும் தடை செய்யப்பட்டுள்ளது. பொதுமக்கள் ஒன்றுகூடும் செயற்பாட்டில் ஈடுபடக்கூடாது.

தற்போது யாழில் மதகுருமார் சிலருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்ட நிலை காணப்படுகின்றது. எனவே பொதுமக்கள் வழிபாட்டுத் தலங்களில் ஒன்று கூடுவதை நிறுத்த வேண்டும்.

பொது இடங்கள் அலுவலகங்கள் மற்றும் வெளியிடங்களுக்கு செல்லும் போது பொதுமக்கள் கட்டாயமாக முக கவசத்தினை சரியான முறையில் அணிந்து செல்ல வேண்டும்.

நாட்டில் கொரோனா தடுப்பூசி வழங்கும் நடவடிக்கைகள் தேசிய ரீதியில் அடிப்படையில் முன்னுரிமை அடிப்படையில் அந்தந்த மாவட்டங்களுக்கு வழங்கப்பட்டு வருகின்றது. யாழ்ப்பாண மாவட்டத்தில் சுகாதார பிரிவினருக்கு முதல் கட்டமாக தடுப்பூசி வழங்கியிருக்கின்றோம். எங்களுடைய கோரிக்கையின் அடிப்படையில் உள்நாட்டலுவல்கள் அமைச்சு எமது மாவட்டத்தில் தடுப்பூசி வழங்கப்படவேண்டியோர் எண்ணிக்கை பற்றி கோரி இருக்கின்றார்கள். அதனை நாங்கள் அனுப்பியிருக்கிறோம். அதன் அடிப்படையிலே யாழ்ப்பாண மாவட்டத்தில் சகல பிரதேச செயலகங்கள் மாவட்ட செயலகம் உட்பட சகல திணைக்கள உத்தியோகத்தர்களுமாக 3,100க்கும் மேற்பட்டோருக்கு தடுப்பூசி வழங்க வேண்டும் என விண்ணப்பித்து இருக்கின்றோம். மிக விரைவில் அக் கோரிக்கை நிறைவேற்றப்படும்.

அத்தோடு யாழ் மாவட்டத்தில் இடைத்தங்கல் சிகிச்சை நிலையங்களாக மேலதிகமான இரண்டு இடங்களை நாங்கள் புதிதாக ஆரம்பித்துள்ளோம். அதாவது வட்டுக்கோட்டை மற்றும் நாவற்குழி பகுதிகளில்.

நாவற்குழியில் 450 பேருக்கு மேற்பட்டோர் தங்க வைப்பதற்கு அடிப்படை கட்டமைப்பு வசதிகள் தற்போது இடம்பெற்று வருகின்றன. இராணுவத்தினரின் ஒத்துழைப்புடன் அந்த அடிப்படை கட்டமைப்புகளை மேம்படுத்தும் செயற்பாட்டில் ஈடுபட்டு வருகின்றோம். அந்த வேலைகள் முடிவடைந்தவுடன் இடைத்தங்கல் சிகிச்சை நிலையம் செயற்படத் தொடங்கும்.

இதைவிட 4 ஆதார வைத்திய சாலைகளிலும் ஒவ்வொரு விடுதிகள் நோயாளர்களை தங்க வக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. அத்தோடு எமக்கு ஆளணி பற்றாக்குறை பெரும் பிரச்சினையாக காணப்படுகின்றது.

யாழ்ப்பாண மாவட்டத்தை பொறுத்தவரை முன்னரை விட தற்போது பிசிஆர் பரிசோதனை எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளது என தெரிவித்தார்.

spot_imgspot_img

More like this
Related

சஷி வீரவன்சவின் தண்டனை 26ஆம் திகதி வரை ஒத்திவைப்பு!

'சஷி வீரவன்ச' என்று அழைக்கப்படும் திருமதி ரணசிங்க முதியன்சலாகே ஷிர்ஜா உதயந்திக்கு...

அர்ச்சுனாவின் சட்டத்தரணி விலகல்

நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை செல்லாததாக்கக் கோரி...

ஒரே நீதிமன்ற வளாகம்… ஒரே நாள்… ஒரே குடும்பம்- மூவர் இன்று வழக்கில் முன்னிலை!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மனைவி ஷிராந்தி ராஜபக்ஷ மற்றும் அவர்களது...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்