கீர்த்தி சுரேஷூம் இளம் நடிகரும் படுக்கையறையில் கட்டிப்பிடித்தபடி உருளும் புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.
இதை படித்ததும் டென்ஷனாகி விடாதீர்கள். முழுமையாக படியுங்கள்.
எந்த நேரத்தில் கீர்த்தி சுரேஷ் தேசிய விருது வாங்கினாரோ அன்றிலிருந்து விருது நடிகை என முத்திரை குத்தி விட்டார்கள் போல. எதிர்பார்த்த அளவு படங்களும் வெற்றிகளும் அவருக்கு கிடைக்கவில்லை.
மகாநதி என்ற படத்திற்காக தேசிய விருது வாங்கினார் கீர்த்தி சுரேஷ். அந்தப் படத்திற்கு பிறகு விருது நாயகி என்ற முத்திரை குத்தப்பட்டு தற்போது முன்னணி நடிகர்களின் பட வாய்ப்புகள் கிடைக்காமல் அவதிப்பட்டு வருகிறார்.
அதுமட்டுமில்லாமல் சோலோ ஹீரோயின் படங்களிலும் நடிக்க ஆரம்பித்துவிட்டார். அவர் அப்படி நடித்த படங்கள் எதுவுமே பெரிதாக வெற்றியை பெறவில்லை. மேலும் சில படங்கள் ரிலீஸ் சிக்கலில் சிக்கித் தவித்துக் கொண்டிருக்கின்றன.
இந்நிலையில் கடைசியாக தெலுங்கு சினிமாவில் உள்ள நடிகர் நிதின் என்பவருடன் கீர்த்தி சுரேஷ் இணைந்து நடித்த ரங்குதே என்ற படம் வெளியாகி ஓரளவு வரவேற்பைப் பெற்றது. மேலும் அடுத்ததாக மகேஷ்பாபு நடிக்கும் சர்க்காரு வாரிபட்டா என்ற படத்தை எதிர்பார்த்துள்ளார்.
ரொமான்டிக் படமாக வெளிவந்த இந்த படத்தில் அந்த நடிகருடன் கொஞ்சம் எக்குத்தப்பான படுக்கை அறை காட்சிகளிலும் நடித்து பரபரப்பை ஏற்படுத்தினார் கீர்த்தி சுரேஷ். இது நம்ம குடும்ப குத்து விளக்கு செய்கிற காரியமா? என பல ரசிகர்கள் இணையத்தில் கிண்டல் செய்தனர்.