பாலஸ்தீனத்தின் மேற்கு காசா பகுதியில் சனிக்கிழமை அதிகாலை இஸ்ரேலிய வான்வழித் தாக்குதலில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 10 பேர் கொல்லப்பட்டனர் என்று பாலஸ்தீனத்தில் உள்ள மருத்துவர்கள் தெரிவித்தனர்.
இஸ்ரேலிய வான் தாக்குதலில் இடிந்து விழுந்த அகதிகள் முகாமில் உள்ள மூன்று மாடி கட்டிடத்தில் எட்டு குழந்தைகள் மற்றும் இரண்டு பெண்கள் கொல்லப்பட்டதாக மருத்துவ வட்டாரங்கள் தெரிவித்தன.
இடிபாடுகளில் இருந்து ஒரு குழந்தை உயிருடன் மீட்கப்பட்டு அல்-ஷிஃபா மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.
அந்த குழந்தையின் தாயாரும் கொல்லப்பட்டார். அவரது கணவர், மனைவிக்கு இறுதிவிடை கொடுக்கும் உணர்ச்சிமிகு காட்சிகள் ருவிற்றரில் பகிரப்பட்டு வருகிறது.
Watch: A Palestinian man bids farewell to his wife, one of his ten family members killed in a single air strike on a #Gaza residential building in the Shati refugee camp. #Palestine https://t.co/md9p4AUKwB pic.twitter.com/Xgc7LJcan4
— Al Arabiya English (@AlArabiya_Eng) May 15, 2021
அதேநபர், மருத்துவமனையில் சிகிச்சை பெறும் தனது குழந்தையை சந்திக்கும் வீடியோவும் வெளியாகியது.
Watch: A father who lost his children and his wife in a single Israeli strike on #Gaza sees his five-month-old baby, the only survivor, after he was rescued from the rubble. #Palestinehttps://t.co/md9p4AUKwB pic.twitter.com/Gd5gyMX7jy
— Al Arabiya English (@AlArabiya_Eng) May 15, 2021
இதேவேளை, காசா முனையில் இஸ்ரேல் நடத்தி வரும் கோரமான தாக்குதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 140 ஆக உயர்ந்துள்ளது. இதில் 39 குழந்தைகளும் உள்ளடங்குகிறார்கள்.
அத்துடன், காசாவில் அல் ஜசீரா, அசோசியேட்டட் பிரஸ் உள்ளிட்ட பல்வேறு ஊடகங்கள், அலுவலகங்கள் இயங்கிய அடுக்கு மாடி கட்டிட தொகுதியின் மீதும் இஸ்ரேல் வான்வழி தாக்குதலை நடத்தியது. இதில் கட்டிடம் இடிந்து விழுந்துள்ளது.