முள்ளிவாய்க்கால் பகுதியை கட்டுப்பாட்டில் கொண்டு வந்த இராணுவம்!

Date:

2009 ஆம் ஆண்டு முள்ளிவாய்க்கால் மண்ணில் உயிரிழந்த உறவுகள் நினைவாக ஆண்டுதோறும் மே மாதம் 12 முதல் 18 வரை முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரம் அனுஷ்டிக்கப்பட்டு வருகிறது.

பல்வேறு அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரம் அனுஸ்டிக்கப்பட்டுவரும் நிலையில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் பொதுக்கட்டமைப்பால் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் முற்றத்தில் “பொது நினைவுக்கல்” ஒன்றினை நடுகை செய்வதற்கான முயற்சிகள் நேற்று மாலையில் முன்னெடுக்கப்பட்ட்து

இன்று மாலை குறித்த பொது நினைவுக்கல் கொண்டுவரப்பட்டு இறக்கி வைக்கப்பட்டுள்ள நிலையில் முள்ளிவாய்க்கால் முற்றத்தைச் சுற்றி பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் குவிக்கப்பட்டு அங்கு பதற்றமான சூழல் நிலவியது

குறித்த நிலைமைகளை தொடர்ந்து முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்துக்கு செல்லக்கூடிய அனைத்து பாதைகளிலும் முள்ளிவாய்க்கால் நினைவு முற்ற வளாகத்தை சூழவும் இராணுவத்தினர் குவிக்கப்பட்டுள்ளனர்

முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்துக்கு அருகாக செல்கின்ற குறித்த வீதியினால் யாரும் செல்லமுடியாது இராணுவத்தினர் தடைவிதித்தனர். குறித்த பகுதி நிலைமைகளை அறிக்கையிட சென்ற ஊடகவியலாளர்களையும் முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்துக்கு செல்ல விடாது திருப்பி அனுப்பியுள்ளனர். யாருமே முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்துக்கு அணுக முடியாது கடுமையான பாதுகாப்பு போடப்பட்டுடிருந்தது.

இந்த நிலையிலேயே தூபி அடித்துடைக்கப்பட்டதுடன், புதிதாக கொண்டு செல்லப்பட்ட நினைவுக்கல் திருடப்பட்டிருந்தது.

spot_imgspot_img

More like this
Related

கொழும்பு துறைமுகத்தில் சிக்கிய ரூ.800 கோடி பெறுமதியான போதைப்பொருள்: தமிழ் வர்த்தகர் கைது!

கொழும்பு துறைமுகத்தின் கொள்கலன் முனையத்தில் இருந்த கொள்கலன் ஒன்றிலிருந்து கைப்பற்றப்பட்ட 472...

மஹிந்த கூட்டத்திற்கு மதிய உணவு வழங்கியவருக்கு 14 வருட சிறை

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில், 2014-ஆம் ஆண்டு கொழும்பில் உள்ள...

ஊடகவியலாளர்களிற்கு வாய்ப்பூட்டு போட முயலும் ஜேவிபி

தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்திற்கும் அமைச்சர்களுக்கும் அபகீர்த்தி ஏற்படுத்தும் விதத்தில் செய்தி...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்