மேலும் 11 கிராம சேவகர் பிரிவுகள் தனிமைப்படுத்தப்பட்டன!

Date:

நாட்டில் மேலும் 3 மாவட்டங்களை சேர்ந்த மேலும் 11 கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் உடன் அமுலுக்கு வரும் வகையில் தனிமைப்படுத்தப்படுவதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார்.

அதேபோல், 3 மாவட்டங்களை சேர்ந்த 4 கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளன.

புதிதாக தனிமைப்படுத்தப்படும் பிரதேசங்கள்

கம்பஹா மாவட்டத்தின், திவுலபிடிய பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட- பாலுகஹவெல கிராம சேவகர் பிரிவு

காலி மாவட்டத்தின், அஹங்கம பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட- கரந்துங்கொடை கிராம சேவகர் பிரிவு, கொவியபான கிராம சேவகர் பிரிவு, கஹவன்னகம கிராம சேவகர் பிரிவு, தொம்மங்கொட கிராம சேவகர் பிரிவு,

ஹபராதுவை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட- லுனுமோதர கிராம சேவகர் பிரிவு, பொனவிஸ்டா கிராம சேவகர் பிரிவு, கட்டுகுருந்த ஆகிய பிரிவுகள்

இரத்தினபுரி மாவட்டத்தின், பெல்மடுல்ல பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட- தெனகவக்க பாதகட கிராம சேவகர் பிரிவு, திப்பிடிகல கிராம சேவகர் பிரிவு,

குருவிட்ட பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட- குருவிட்ட கிராம சேவகர் பிரிவிற்கு உட்பட்ட தெல்கமுவ பிரிவின் நகரப் பகுதி ஆகிய பிரதேசங்கள் தனிமைப்படுத்தப்படுகின்றன.

தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்படும் பிரதேசங்கள்.

கொழும்பு மாவட்டம், பதுக்கை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட உக்கல்ல கிராம சேவகர் பிரிவு,

அம்பாறை மாவட்டம், தெஹியத்தகண்டிய பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட தெஹியத்தகண்டிய கிராம சேவகர் பிரிவு

நுவரெலியா மாவட்டம், ஹட்டன் பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட போடைஸ் தோட்ட கிராம சேவகர் பிரிவின் கோனகல பிரிவு மற்றும் போடைஸ் கிராம சேவகர் பிரிவின் 30 ஏக்கர் பிரிவு ஆகிய பகுதிகள் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்படுவதாக இராணுவத் தளபதி தெரிவித்துள்ளார்.

spot_imgspot_img

More like this
Related

கொழும்பு துறைமுகத்தில் சிக்கிய ரூ.800 கோடி பெறுமதியான போதைப்பொருள்: தமிழ் வர்த்தகர் கைது!

கொழும்பு துறைமுகத்தின் கொள்கலன் முனையத்தில் இருந்த கொள்கலன் ஒன்றிலிருந்து கைப்பற்றப்பட்ட 472...

மஹிந்த கூட்டத்திற்கு மதிய உணவு வழங்கியவருக்கு 14 வருட சிறை

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில், 2014-ஆம் ஆண்டு கொழும்பில் உள்ள...

ஊடகவியலாளர்களிற்கு வாய்ப்பூட்டு போட முயலும் ஜேவிபி

தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்திற்கும் அமைச்சர்களுக்கும் அபகீர்த்தி ஏற்படுத்தும் விதத்தில் செய்தி...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்