24.6 C
Jaffna
January 21, 2025
Pagetamil
விளையாட்டு

ஜூன் 2ம் தேதி இங்கிலாந்து செல்லும் இந்திய அணி; கடுமையான தனிமைப்படுத்தல் விதிகள்!

இங்கிலாந்து தொடருக்கு முன்பாக இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள் சுமார் 8 நாட்கள் தனிமைப்படுத்தப்படவுள்ளனர்.

இங்கிலாந்து செல்லும் இந்திய கிரிக்கெட் அணி 6 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. இதைத்தொடர்ந்து நியூசிலாந்துக்கு எதிரான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் ஃபைனல் போட்டியில் இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள் பங்கேற்கின்றனர். இதில் பங்கேற்கும் இந்திய அணி வீரர்கள் வரும் ஜூன் 2ம் தேதி இங்கிலாந்து கிளம்புகின்றனர்.

இதற்காக இந்திய அணி வீரர்கள் வீட்டில் தனிமைப்படுத்தப்படாமல் மும்பையில் பிசிசிஐ ஏற்பா டு செய்யும் இடத்தில் தனிமைப்படுத்தப்படவுள்ளனர். இங்கிலாந்து தரையிறங்கிய பின் அங்கு பயிற்சிக்கான அனுமதியுடன் கூடிய 10 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்ட பின் சுமார் மூன்றரை மாதம் இங்கிலாந்தில் தங்கி இந்திய அணி வீரர்கள் தொடரில் பங்கேற்கவுள்ளனர்.

இதுதொடர்பாக பிசிசிஐ அதிகாரி கூறுகையில், “இந்திய அணி வீரர்கள் 8 நாட்கள் ஹோட்டல் ரூம்களில் கடினமான தனிமைப்படுத்தப்படுவார்கள். தொடர்ந்து இரண்டாவது, நான்காவது மற்றும் ஏழாவது நாட்கள் எடுக்கப்படும் ஆர்டி- பிசிஆர் சோதனை முடிவுகள் நெகட்டிவ் என வரவேண்டும். அதற்குபின் தான் அவர்கள் விமானத்திற்கு செல்ல அனுமதிக்கப்படுவார்கள்.

பயோ பபுளில் இருந்து நேரடியாக பயோ பபுளுக்கு செல்வதால் 10 நாட்கள் தனிமைப்படுத்தபடுதல் காலம் என்பது குறையும். அதேநேரம் இந்த காலத்தில் வீரர்கள் பயிற்சி மேற்கொள்ளவும் அனுமதிக்கப்படுவார்கள். சவுத்தாம்டனில் உள்ள ஹோட்டலில் வீரர்கள் தங்க அனுமதிக்கப்படுவார்கள்” என்றார்.

இந்நிலையில் சவுத்தாம்டனில் நடக்கும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனல் போட்டியைக் காண பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி மற்றும் செயலாளர் ஜெய் ஷா ஆகியோர் நேரடியாக செல்வார்கள் என தெரிகிறது. இதுகுறித்து பிசிசிஐ அதிகாரி ஒருவர் கூறுகையில்,“உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனல் போட்டியின் போது தலைவர் மற்றும் செயலாளர் ஆகியோர் நேரடியாக அங்கு செல்வார்கள். இதுதான் தற்போதைய நிலவரம்” என்றார்.

இந்த பயணத்தின் போது இந்தியாவில் நடத்தப்பட்ட ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் எஞ்சியுள்ள 31 போட்டிகளை நடத்துவது குறித்தும் இங்கிலாந்து கிரிக்கெட் போர்டு உடன் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என தெரிகிறது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

என் மகளுக்கு நிச்சயதார்த்தம் நடக்கவில்லை!

Pagetamil

`இளம் எம்.பி -யைக் கரம் பிடிக்கும் ரிங்கு சிங்’; யார் இந்த பிரியா சரோஜ்?

Pagetamil

‘உங்களை விட என் மகன் சிறந்த வீரர்’ – கபில் தேவுக்கு ‘பேப்பர் கட்டிங்’ அனுப்பிய யோக்ராஜ் சிங்

Pagetamil

சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து நியூஸிலாந்தின் மார்டின் கப்தில் ஓய்வு!

Pagetamil

தீர்ந்தது 10 ஆண்டு தாகம்: அவுஸ்திரேலியா வசமானது போர்டர் – கவாஸ்கர் டிராபி!

Pagetamil

Leave a Comment